முஸ்லிம் கவர்னர்கள் நேற்று பதவியை ராஜினாமா செய்தனர்

இலங்கையில் புத்த மதத்தினரும் கிருத்துவர்களும் போராட்டத்தை தீவிரப்படுத்தியதால் இரண்டு முஸ்லிம் கவர்னர்கள்  நேற்று பதவியை ராஜினாமா செய்தனர் .
பயங்கரவாத அமைப்பினருடன் தொடர்புடையதாக தொடர்ந்து குற்றம் சாட்டப்படத்தால் 9 அமைச்சர்களும் நேற்று ராஜினாமா செய்தனார் இலங்கை தலைநகர் கொழும்புவில் ஏப்ரல் 21ல் கிறிஸ்தவ வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பிரபல நட்சத்திர ஓட்டல்களில் முஸ்லிம் பயங்கரவாதிகள் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.இதில் 258 பேர் இறந்தனர்; 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

அதையடுத்து முஸ்லிம்கள் மீதும் அந்த மதத்தினர் நடத்தும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் மீதும் பெரும்பான்மை சிங்களர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் மேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் முஸ்லிம்கவர்னர்கள் இருவர் பயங்கரவாதத்திற்கு ஆதரவாக செயல்படுவதாக புத்த மதத்தினர் குற்றம்சாட்டினர். இவர்கள் இருவரும் பதவி விலக வலியுறுத்தி கண்டி நகரில் புத்தர் கோவில் அருகே புத்த மதத்துறவி அதுரலியே ரதனா என்பவர் சாகும் வரை உண்ணாவிரதத்தை நான்கு நாட்களுக்குமுன் துவக்கினார்.

பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் அந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்களுடன் கிறிஸ்தவர்களும் பெருவாரியாக பங்கேற்றனர். இதனால் இரண்டு முஸ்லிம் கவர்னர்களும் நேற்று தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து கடிதத்தை அதிபர் சிறிசேனவிடம் கொடுத்தனர். அதுபோல ஒன்பது அமைச்சர்களும் பதவிகளை ராஜினாமா செய்து கடிதங்களை ஜனாதிபதி சிறிசேனவிடம் ஒப்படைத்தனர்.பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புபடுத்தி தங்கள் மீது நடத்தப்படும் பொய் பிரசாரங்களை விசாரிக்க வலியுறுத்தி ராஜினாமா செய்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *