ஆன்மிகம்ஜோதிடம்

04/05/2019 தின ராசி பலன்

Tamil astrology 04/05/2019

கணித்தவர்
ஜோதிட ஆசிரியர்
J. முனிகிருஷ்ணன். M.E,D.Astro.,

தமிழ் நேரலை

மேஷம்

அற்ப ஆசைகள் இல்லாத மேஷ ராசியில் பிறந்த உங்களுக்கு இன்று அலைச்சல் அதிகரிக்கும் நாள், எதிரிகள் தொல்லை தனநஷ்டம், காரிய தடை, தொழிலில் முன்னேற்றம்,பிள்ளைகளால் சந்தோஷம் ஏற்படும் நாள்.

ரிஷபம்

கம்பீரமான தோற்றமுடைய ரிஷப ராசியில் பிறந்த உங்களுக்கு இன்று தனலாபம் ஏற்படும் நாள், பயணத்தால் ஆதாயம் பெறுவீர்கள், பேச்சில் கவனம் தேவை. புதிய முயற்சிகள் கைகூடும் நாள்.

மிதுனம்

 

உயர்ந்த நோக்கங்களை கொண்ட மிதுன ராசியில் பிறந்த உங்களுக்கு இன்று தனவரவு, உறவினர்களால் சந்தோஷம் ஏற்படும் நாள். மன கவலை, அலைச்சல், சுகவீனம் ஏற்படும். பிள்ளைகளால் குடும்பத்தில் சந்தோஷமும்,மகிழ்ச்சியும் அடையும் நாள்.

கடகம்

பேச்சு சாமர்த்தியம் மிக்க கடக ராசியில் பிறந்த உங்களுக்கு இன்று தனலாபம் உண்டு. போட்டி பந்தயங்களில் வெற்றி பெறும் நாள்.குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். தொழிலில் முன்னேற்றமும்,பணியாளர்களின் ஆதரவும் கிடைக்கும். இன்று சிறப்பான நாளாக அமையும்.

சிம்மம்


தொழிலில் ஊக்கத்துடன் செயல்படும் சிம்ம ராசியில் பிறந்த உங்களுக்கு செய்யும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இன்று காரிய அனுகூலம் ஏற்படும் நாள்.

கன்னி

நீதி, நேர்மை போன்ற உன்னத பண்புகளை கொண்ட கன்னி ராசியில் பிறந்த உங்களுக்கு இன்று மந்தமான போக்கு ஏற்படும். கவன குறைவால் சந்தோஷங்கள் பாதிக்கும். தொழிலில் புதிய முயற்சியில் ஈடுபடுவதை தவிர்க்கவும். களத்திர மூலம் ஆதாயம் ஏற்படும்.

துலாம்

பேச்சில் வியாபார நோக்கம் கொண்ட துலாம் ராசியில் பிறந்த உங்களுக்கு இன்று இறைவன் திருவருள் கிட்டும் நாள். ஆன்மிக சிந்தனை மேலோங்கும். தன லாபம் அடைவீர்கள். உடல் ஆரோக்கியம் பெறுவீர்கள்.குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.

விருச்சிகம்

எதையும் நேருக்கு நேராக பேசும் திறமை கொண்ட விருச்சக ராசியில் பிறந்த உங்களுக்கு இன்று மனதில் பயம், எதிரி தொல்லை ஏற்படும். தனலாபம் பெறுவீர்கள். நண்பர்களாலும், களத்திரத்தினாலும் ஆதாயம் பெறுவீர். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

தனுசு

நல் ஒழுக்கங்களை கொண்ட தனுசு ராசியில் பிறந்த உங்களுக்கு இன்று செல்வாக்கு உயரும் நாள். தொழிலில் லாபம் பெறுவீர்கள். தன லாபம் உண்டு. உடன் இருப்பவர்களிடம் எச்சரிக்கையாக பழகவும். வாயு தொல்லை ஏற்படும். உணவு கட்டுப்பாடு தேவை.

மகரம்

வாசனை திரவியங்களில் பிரியம் கொண்ட மகர ராசியில் பிறந்த உங்களுக்கு இன்று தன லாபம்,குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும் நாள். தொழில் முன்னேற்றம், லாபம் ஏற்படும்.புத்திரர்களால் சந்தோஷம் ஏற்படும். பேச்சில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியம் பெறும் நாள்.

கும்பம்


ஆசார அனுஷ்டானங்களில் பற்றுதல் கொண்ட கும்ப ராசியில் பிறந்த உங்களுக்கு இன்று சிறப்பான நாளாக அமையும்.தன லாபம் கிடைக்கும்.காரியங்கள்  வெற்றி பெறும் .வேலை இடங்களில் பதவி உயர்வு ஏற்படும்.உடல் ஆரோக்கியம் பெறும் .மன மகிழ்ச்சி உடன்  சந்தோஷ நிலையை அடைவீர்கள்.உறவினர்களால் சந்தோஷம் ஏற்படும் நாள் .

மீனம்


அழகிய தோற்றமும் பயந்த சுபாமும் கொண்ட மீன ராசியில் பிறந்த உங்களுக்கு இன்று பிற்பாதி சிறப்பாக அமையும்.எடுத்த காரியங்களில் அனுகூலம் கிட்ட நிதான போக்கை கடைபிடிக்க வேண்டிய நாள்.தொழில் முன்னேற்றம் ஏற்படும்.எச்சரிக்கை உடன் இருக்க வேண்டிய நாள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker