02/05/2019 தின ராசி பலன்

கணித்தவர்
ஜோதிட ஆசிரியர்
J. முனிகிருஷ்ணன். M.E,D.Astro.,

தமிழ் நேரலை

மேஷம்


தொழில் சார்ந்த பணிகள் சிறப்பாக இருக்கும். உங்கள் திறமைக்கும் செயலுக்கும் அங்கீகாரம் கிடைக்கும். உங்கள் குடும்ப உறவுகள் பற்று பாசத்தோடு அக்கறை காட்டுவார்கள். வருமானம் சிறப்பாக இருக்கும்.

ரிஷபம்

தொழில் தேக்கநிலை ஏற்படும்.முயற்சிகள் தாமதமாகும். அந்தஸ்து, கவுரவும் கிடைக்கும். தனவரவு சிறப்பாக இருக்காது. இளைய சகோதரர் மூலம் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் கருத்து வேறுபாடு தோன்றும். மனைவி மூலம் ஆதாயம் உண்டு.

மிதுனம்

இன்று தொழில் சார்ந்த முயற்சிகள் கைகூடும். வரவேண்டிய தொகை தாமதமாகும். சகோதர வழி ஆதரவு கிடைக்கும். இன்று குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். மனைவி உங்கள் மீது மிகுந்த அன்புடன் இருப்பார்.

கடகம்


இன்று தொழலில் எதிர்பாரா லாபம் கிடைக்கும். குடும்பத்திலும் சந்தோஷம் நிலவும். உங்கள் பேச்சிற்கு நண்பர்கள் மத்தியில் ஆதரவு கிடைக்காது.குழந்தைகளின் மூலம் சந்தோஷம் நிலவும்.

சிம்மம்

கணவன், மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். நீண்ட நாள் கருத்து வேறுபாடு அகலும்.குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். தொழிலில் மணகுழப்பம் ஏற்படும்,பணியாளர்களிடம் கவனத்துடன் பழக வேண்டும். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம்.

கன்னி

இன்று உங்களுக்கு அதிஷ்டகரமான நாள். உங்களுக்கு வரவேண்டிய பணம் உங்கள் கைகளுக்கு வந்து சேரும்.குடும்பத்தினரோடு வெளியில் சென்று சந்தோஷம் கான வேண்டிய நாள். இன்று எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். எதை செய்வதாக இருந்தாலும் மற்றவரிடம் ஆலோசனை கேட்டு நடக்கவும்.

துலாம்

நீங்கள் பணிபுரியும் இடத்தில் கவனமாக இருக்க வேண்டும், மன குழப்பங்கள் ஏற்படும். உங்கள் மனைவியுடன் இனிமையாக பேசுங்கள்.குடும்பத்தில் நிம்மதி குறைவு ஏற்படும். இளைய சகோதரர் வழியில் ஆதாயம் உண்டு.

விருச்சிகம்

இன்று உங்கள் அந்தஸ்து உயரும் நாள். பேச்சில் கவனம் தேவை. கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.குழந்தைகளின் மூலம் சந்தோஷம் அடையும் நாள்.

தனுசு


மனசஞ்சலங்கள் ஏற்படும் நாள், தாயின் பாசத்தை முழுமையாக புரிந்து கொள்வீர்கள்.தொழிலுக்காக எடுத்த முயற்சிகளில் குழப்பங்கள் ஏற்படும்.குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.

மகரம்

இன்று வரவுக்கு மீறிய செலவு ஏற்படும். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படும் நாள். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தாயார் உடல் நலனில் சற்று கவனம் தேவை.

கும்பம்

இன்று எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். மூத்த சகோதரர் ஆதரவு கிட்டும். தொழில் முன்னேற்றம் ஏற்படும்.குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். பேச்சில் கவனம் தேவை.

மீனம்

தொழில் முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் லாபம் பெறுவீர்கள். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தாயார் உங்கள் மீது அக்கறை  செலுத்துவார். ஆதாயம் உண்டு.குடும்பத்தில் சிறு சிறு குழப்பங்கள் நிலவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *