இந்தியாவின் பிரபல கார் நிறுவனங்களில் ஒன்று ஹோண்டா ஆகும். ஹோண்டா நிறுவனத்தின் வெற்றிகரமான காரான அமேஸ் 13 மாதங்களில் ஒரு லட்சம் எண்ணிக்கை விற்பனையாகியுள்ளது. இந்நிலையில் அமேஸ் காரின் புது மாடலை வெளியிட்டுள்ளது ஹோண்டா.
ஏஸ் (Ace) மாடலானது டீசல் மற்றும் பெட்ரோல் என இரு வகையில் விஎக்ஸ் கிரேட்டில் வருகிறது. அது மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. பெட்ரோல் வகை ஏஸ் மாடலின் விலை 7.89 லட்சம் ரூபாய் முதல் 8.72 லட்சம் ரூபாய் வரையும் டீசல் வகையின் விலை 8.99 லட்சம் ரூபாயிலிருந்து 9.72 லட்சம் ரூபாய் வரையிலும் நிர்ணைக்கப்பட்டுள்ளது.
அமேஸ் காரானது ஹோண்டா நிறுவனத்திற்கு லாபத்தை தந்தது
டெக்னிக்கலாக ஸ்டைலான பிளாக் அலாய் சக்கரங்கள், சீட் கவர், முன் ரூம் லாம்ப், ஏஸ் மாடல் குறியீடு பெற்றுள்ளது. ஹோண்டா கார்ஸ் இந்தியாவின் விற்பனை பிரிவு இயக்குநரான ராஜேஷ் கோயல் கூறுகையில், ‘இரண்டாம் தலைமுறை அமேஸ் கார் ஹோண்டா நிறுவனத்தின் சிறந்த காராகும். 13 மாதங்களில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட கார்களை இது விற்றுள்ளது. 2013 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட அமேஸ் காரை ஒப்பிடும் போது இது 20 சதவிகிதம் அதிகம் விற்பனையாகியுள்ளது. இந்த வெற்றியை பிரதிபலிக்கும் விதமாக புது ஏஸ் மாடல் அமேஸ் காரை அறிமுகம் செய்துள்ளோம்’ என்றார்.
அமேஸ் காரின் ஆட்டோமெடிக் வகைக்கு நல்ல வரவேற்புள்ளது. 20 சதவிகிதம் மக்கள் ஆட்டோமெடிக் மாடல் அமேஸ் காரையே தேர்ந்தெடுத்துள்ளனர். மேலும் 2019 – 20 ஆண்டில் HCIL விற்பனையில் 52 சதவிகிதம் அமேஸ் காராகும்.