இந்தியாவின் தொழில் அதிபர் முகேஷ் அம்பானி அவர்கள் தனது முதலீடுகளை ஹோட்டல் தொழிலில் ஈடுபத்தி உள்ளார். ஆனால்¸ இந்தியாவில் உள்ள ஹொட்டல்களில் அல்ல. வெளிநாடுகளில் உள்ள புகழ்பெற்ற ஹோட்டல்களில் தனது பங்குகளை முதலீடு செய்து ஆரம்பிக்க உள்ளார்.
கடந்த நான்கு வருடங்களில் ரிலையன்ஸ் நிறுவனத்தில் 14 சதவீகிதமும்¸ 80 சதவிகிதம் மீடியா மற்றும் தொலைத்தொடர்பு போன்ற நிறுவனங்களில் தனது முதலீடுகளை செய்து உள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 592 கோடிகளை பிரிட்டனின் கிளப்ஸ்ரோக் பார்க்கில் முதலீடு செய்தார். தற்பொழுது அமெரிக்காவின் புகழ்பெற்ற டைம்ஸ் ஸ்கொயர் அருகில் உள்ள மாண்டரின் ஓரியண்டல் ஹோட்டலில் 73.7 சதவீத பங்குகளை அதாவது 98.15 மில்லியன் டாலர் இந்திய மதிப்பில் ஏறக்குறைய 729 கோடிகளை முதலீடு செய்துள்ளார். இதன் மொத்த முதலீடு 270 மில்லியன் டாலராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சொகுசு ஹோட்டலில் மொத்தம் 248 அறைகள் உள்ளன. 2003-ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஹோட்டல் அமெரிக்காவில் புகழ்பெற்ற ஹோட்டல்களில் ஒன்றாகும். கடந்த வெள்ளிக்கிழமையுடன் முடிந்த பங்கு மார்க்கெட்டில் ரிலையன்ஸ் பங்குகள் 0.8 உயர்ந்து ரூ.2435.95 ஆக முடிந்தது. அதன் மொத்த மதிப்பு ரூ.16.47 ட்ரில்லியன் ஆக உள்ளது.