ஹிட்லர் என் தாயாருடன் ரகசியமாக உறவு வைத்து இருந்தார்..

அடால்ப் ஹிட்லர் என் அம்மாவுடன் ரகசியமாக உறவு வைத்துக்கொண்டார் என மறைந்த பிரபல நடிகை ரோமி ஸ்னைடர் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சர்வாதிகாரி ஹிட்லருக்கு மிகவும் பிடித்தமான நடிகையாக இருந்தவர் மெக்டா . அவர் கடந்த 1933-ம் ஆண்டு ஒரு படப்பிடிப்பின் போது வால்ஃப் ஆல்ப்-ரெட்டி என்ற நடிகரை சந்தித்து அவர் மீது காதல் வயப்பட்டார். அடுத்த 4 வருடங்களுக்கு பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த் இருவருக்கும் பிறந்த ரோமி ஸ்னைடர் ஜெர்மனியின் பிரபலமான நடிகையாக வலம் வந்தார். அவர் கடந்த 1976-ம் ஆண்டு, இறப்பதற்கு 5 வருடங்களுக்கு முன்னதாக, பத்திரிக்கையாளர் ஆலிஸ் ஸ்க்வார்சர் என்பவரிடம் ரகசியமான பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அந்த பேட்டி பற்றிய செய்திகள் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அந்த பேட்டியில், பிரபலமான நடிகையாக வலம் வந்தாலும். தன்னுடைய தாய் மெக்டா, ஹிட்லருடன் ரகசியமாக பாலியல் உறவு வைத்திருந்ததை நினைத்து பெரும் வேதனை அடைந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *