ஹானர் 20i’ ஸ்மார்ட்போன், இந்தியாவில் இன்று விற்பனையாகவுள்ளது. 4GB RAM மற்றும் 128GB செமிப்பு அளவு என ஒரே வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்போன், இந்தியாவில் 14,990 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகவுள்ளது. ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தில் விற்பனையாகவுள்ள இந்த ஸ்மார்ட்போன், நீலம் மற்றும் கருப்பு என இரு வண்ணங்கள் கொண்டு வெளியாகிறது இந்த ஸ்மார்ட்போன்.
இந்த ஸ்மார்ட்போன் ஜூன் 18-ஆம் தேதியான இன்று மதியம் 12 மணிக்கு ஃப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனையாகவுள்ளது.
ஹானர் 20i: சிறப்பம்சங்கள்!
இந்த ஹானர் 20i ஸ்மார்ட்போன் 6.21-இன்ச் FHD+ திரை அளவு, 1080×2340 பிக்சல்கள், 19.5:9 திரை விகிதம் ஆகிய திரை அம்சங்களை கொண்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பில் செயல்படும் இந்த ஸ்மார்ட்போனில், ஆக்டா-கோர் கிரின் 710F எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.
மூன்று பின்புற கேமராக்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். முதன்மையாக 24 மெகாபிக்சல் கேமராவுடன் 8 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் அளவிலான மூன்று கேமராக்களை கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன், முன்புறத்தில் 32 மெகாபிக்சல் செல்பி கேமராவை கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 3400mAh அளவிலான பேட்டரியை கொண்டு வெளியாகியுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் 4G வசதி மற்றும் ப்ளூடூத் v4.2, வை-பை வசதிகளை கொண்டுள்ளது.