கட்டுரைகள்விளையாட்டுஹாக்கி

ஹாக்கி மைதானமே வீடு

ANNA HOCKEY FAMILY

 

பள்ளியில் விளையாடியதால் மட்டுமல்ல ஹாக்கி மீது அவர்களுக்கு இருத்த பற்றும் காதலும் தான் காரணம் அவர்கள் கால் அண்ணா பல்கலைக்கழக மைதானத்தில் பதிய.கண்கள் ஓரிடத்தில் பதியவில்லை நாலாபுறமும் சுழன்றது இல்லை தேடியது ஆம் ஹாக்கி மைதானத்தை கிடைக்கவில்லை அவர்களும் சோர்ந்துவிடவில்லை.
2005-ல் இவர்களின் ஹாக்கி காதலை மேலும் அதிகரிக்கவும் ஒரு சீரான முறையில் அவர்களை வழிநடத்தவும் வரமாகக் கிடைத்தவர் இவர் (வாத்தியார்)
ஆனால் வாத்தியாராக பழகாமல் தோழமையோடு பழகிய இவருடைய குணம் அவர்களின் ஆர்வத்தை மேலும் அதிகரித்தது.உடைந்த ஹாக்கி மட்டையையும், கிடைத்த சின்ன இடத்தையும் வைத்து இவர் அவர்களை வடிவமைத்தார். பல வெற்றிகள் அவர்களுக்குக் கிடைக்க வழிவகுத்தார். இவர் குணத்திற்கு கிடைத்த பரிசு என்றே கூறலாம். ஹாக்கி அணியாக இருந்தது. 2006-ல் ஹாக்கி குடும்பமாக உருமாறியது.
இவரின் கற்றுக்கொடுக்கும் ஆர்வம் மேலும் வளர்ந்தது. இந்த ஹாக்கி குடும்பத்தின் இடைவிடாத உழைப்பிற்கும் வெற்றியை நோக்கிய பயணத்திற்கும் ஒரு அங்கிகாரமாகவும் ஒரு கிரிடம் ஆகவும் 2012-ல் கிடைத்தது ஹாக்கி மைதானம்.

ஹாக்கி அணியைக் குடும்பமாக பாவித்த அவர்களுக்கு ஹாக்கி மைதானமே வீடாக அமைந்தது.


விளையாட்டின் மீது அவர்களுக்கு இருந்த ஆர்வம் எந்த விதத்திலும் கல்வியை பாதிக்கவில்லை பாதிக்கவும் விட்டுவிடவில்லை இவர்.
இந்த குடும்பத்திற்கு மேலும் அழகு சேர்க்கவும் வலு சேர்க்கவும் 2015-ல் உருவானது மகளிர் அணி மகளிர் அணியையும் ஆண்கலள் அணிக்கு இணையாக உருவாக்கும் சவாலை ஏற்றுக்கொண்டார் இவர்.


பலதடைகளையும் எதிர்ப்புகளையும் தகர்த்து எரிய முயற்சிகள் பல மேற்கொண்டார்.
அடுப்பங்கரையை விட்டு அகன்று வகுப்பறைக்குள் குவிந்து கொண்டு இருக்கும் பெண்கள் வகுப்பறையோடு நின்றுவிடக்கூடாது.

மைதானத்திலும் அவர்கள் கால்கள் பதியவேண்டும் என நினைத்தார் முயற்சிகள் பல எடுத்தார். முடியாதோ என மூளையிலேயே முடங்கநினைத்த பெண்கள் இன்று வாகைகள் பல சூடி வலம்வர வழிவகுத்தார். விளையாட்டில் மட்டும் வெற்றிகள் காண வைப்பவர் அல்ல இவர் நம் வாழ்க்கையிலும் வெற்றிகள் குவிய வழிநடத்துபவர். அப்படிப்பட்ட உங்களை வாழ்த்த வயதில்லை ஆதலால் வணங்குகிறோம் வாத்தியாரே !…

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker