ஸ்ரீரங்கம் கோயிலில் சிலைகள் திருட்டா?

சென்னை: ஸ்ரீரங்கம் ரங்கநாதசாமி கோயிலில் சில சிலைகள் காணாமல் போனது, கோபுர விமானம், நகைகள் மாயமானது, பழமைவாய்ந்த சன்னதி கதவுகள் மாற்றப்பட்டுள்ளது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி ரங்கராஜன் நரசிம்மன், வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். திருட்டு போனதாகக் கூறப்படும் பொருட்கள் கோயிலிலேயே இருப்பதாக அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் “சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சென்று உண்மை நிலவரத்தை ஆய்வு செய்ய வேண்டும்.  சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் இருதரப்பும் தங்களிடம் உள்ள ஆவணங்கள் மற்றும் சான்றுகளை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது” என்று உத்தரவிட்டனர்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *