ஸ்மிரிதி மந்தனா மீண்டும் அசத்தல் தொடரை வென்றது இந்தியா

இந்தியா மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகள் மோதிய இரண்டாவது ஒரு நாள் போட்டி பே ஒவல் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 45 ஓவர்களில் 161 ரன்களுக்கு  ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் கேப்டன் சட்டர்த்வெயிட் அதிகபட்சமாக 71 ரன்கள் குவித்தார். இந்திய அணியின் கோஸ்வாமி 3 விக்கெட்களையும் பிஸ்சட் , தீப்தி ஷர்மா, பூனம் யாதவ் தலா இரண்டு விக்கெட்களையும் கைப்பற்றினர்.

அடுத்து ஆடிய இந்திய அணி 36 வது ஓவரில் இரண்டு விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. இந்திய வீராங்கனை மந்தனா 83 பந்துகளில் 13 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உடன் 90 ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் நின்றார். மித்தாலி ராஜ் தன் பங்குக்கு 111 பந்துகளில் 63 ரன்கள் அடித்து களத்தில் நின்றார். எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற இந்திய மகளிர் அணி  3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 2_0 என முன்னிலை உடன் தொடரை கைபற்றி உள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *