ஸ்டெர்லைட்டை திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தவிட்டிருப்பது குறித்து அ.ம.மு.கழக துணைப் பொதுசெயலாளர் டிடிவி.தினகரன் அவர்கள் தனது முகநூலில் கருந்து தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட்டை திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தவிட்டிருப்பது ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.13 உயிர்கள் அநியாயமாக பலியானதற்கு பின்பும், மேம்போக்காக இவ்வழக்கை பழனிசாமி அரசு கையாண்ட போக்கை வைத்தே இப்படித்தான் தீர்ப்பு வரும் என்று பலரும் எதிர்பார்த்தனர்
தமிழக மக்களுக்கு எதிரான பல்வேறு சட்டப்போராட்டங்களில் தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வந்துள்ள பழனிசாமி அரசு, இப்போதாவது தூத்துக்குடி மக்களின் நலன் கருதி சட்டமன்றத்தைக் கூட்டி தமிழகத்தில் தாமிர ஆலைகளே வேண்டாம் என்ற கொள்கை முடிவெடுத்து தீர்மானம் நிறைவேற்ற முன்வரவேண்டும்.