புகழ்பெற்ற சி.டி.எஸ் நிறுவனத்திடம் கட்டிட அனுமதி, மின் இணைப்பு மற்றும் சுற்றுச்சூழல் அனுமதி பெற 26 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றிருக்கிறது அ.தி.மு.க அரசு. தமிழகத்தை நாசமாக்கியதோடு, உலக அரங்கில் வாழும் தமிழர்களுக்கும், குறிப்பாக அமெரிக்காவில் உள்ள தமிழர்களுக்கும் அழிக்க முடியாத அவமானத்தை ஏற்படுத்தி விட்டது அ.தி.மு.க அரசு.தமிழகத்தில் இந்திய ரூபாயில் கொள்ளையடித்த அ.தி.மு.க அரசு தற்போது அமெரிக்க டாலரில் கொள்ளையடிப்பது வெட்கக்கேடானது என திராவிட முன்னேற்ற கழக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார்.
ஸ்டாலின் குற்றச்சாட்டு
