ஷங்கர் தயாரிப்பில் இந்தியன் 2

ஷங்கர் தயாரிப்பில் உருவாக இருக்கும் அடுத்தப் படம் இந்தியன் 2. இந்தப் படத்தில் கமல்ஹாசன் அப்பாவாகவும், காஜல் அகர்வால் மகளாகவும் நடிக்க இருக்கிறார்கள். இந்தப் படத்திற்கான செட் போடும் பணி இப்பொழுது நடைபெற்று வருகிறது. இந்தச் செட் ரூபாய் 2 கோடி அளவில் பிரம்மாண்டமாக நடந்து வருகின்றது.

இந்தச் செட் போடும் பணி நினைப்பதை விடக் கூடுதல் நேரம் எடுக்கிறதாம் அதனால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போகிறது. டிசம்பர் மாதம் ஆரம்பிக்க இருந்த இந்தப் படப்பிடிப்பு தற்பொழுது ஜனவரி மாதம் ஆரம்பிப்பதாகக் கூறப்படுகிறது.

இதற்காகக் காஜல் அகர்வாலும், கமலஹாசனும் அவர்களைத் தயார்படுத்தி கொண்டு வருகின்றனர் என்று கூறப்படுகிறது. இந்தியன் படத்தில் கமல்ஹாசன் வர்மக்கலையைப் பயன்படுத்தினார். அதேபோன்று இந்தியன் 2 படத்தில் நடிகை காஜல் அகர்வால் வர்ம கலையைப் பயன்படுத்தப்போவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. காஜல் அகர்வால் வர்மக்கலை கற்றுக் கொண்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தப் படம் 2020 பொங்கலுக்கு வெளியாகும் எனப் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். எந்தப் படத்தில் அம்மா கேரக்டராக யார் நடிக்கப் போகிறார் என்பது சர்ப்ரைசாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *