பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான வோக்ஸ்வேகன் நிறுவனத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூ.500 கோடி அபராதம் விதித்துள்ளது. வோக்ஸ்வேகன் டீசல் கார்களில் பயன்படுத்தப்பட்ட உபகரணம் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கக் கூடியதாக இருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டது. அதிகப்படியான நைட்ரஜன் ஆக்சைடை காற்றில் கலக்கிவிட்டதாகவும் கூறப்பட்டது.
அதுமட்டுமல்லாது எமிஷன் விதிகளை மீறிய விவகாரத்தில் வோக்ஸ்வேகன் நிறுவன வாகனங்களின் இந்திய விற்பனைக்கு தடை கோரி பசுமை திர்ப்பாயத்தில் ஆசிரியை அய்லாவதி உள்ளிட்ட பலர் மனு அளித்தனர். இன்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் ஆதர்ஷ் குமார் கோயல் வோக்ஸ்வேகன் நிறுவனத்துக்கு ரூ.500 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார்.அபராதத்தை 2 மாதத்திற்குள் தர உத்தரவிடப்பட்டுள்ளது.
வோக்ஸ்வேகன் கார் நிறுவனத்துக்கு அபராதம்?
