சில நாட்களுக்கு முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் சபரிமலைக்குச் சென்றிருத்தார் அப்பொழுது அவருக்கு எஸ்பி யாதீஸ்சந்திராவுக்கும் சிறு வாக்குவாதம் ஏற்பட்டது.
அதாவது பயணிக்கும் வாகனம் நிறுத்துவது தொடர்பாக இந்தச் சர்ச்சை ஏற்பட்டது.பிறகு பேருந்தில் பயணித்துப் பம்பைக்குச் சென்றார். அதன் பிறகு கண்ணீர்மல்க பேட்டியளித்தார். இது நாடு முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது.
அதன் பிறகு பாஜக தலைவர்கள் அவரைக் கடுமையாக விமர்சித்து வந்தார்கள் அதற்குக் கேரளா முதல்வர் பதிலளித்தார்.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகத்தில் கேரளா அரசு மற்றும் எஸ்பி யாதீஸ்சந்திரா மீதும் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரைப் பாஜக அளித்தது. எஸ்பி யாதீஸ்சந்திராவுக்குக் கேரள அரசு இன்று திருச்சூர் மாவட்ட கண்காணிப்பளாராகப் பணி இட மாற்றம் வழங்கி உள்ளது.