கிரிக்கெட் விமர்சகர்,பொறியாளர் S.வீரசெல்வம். தமிழ்நேரலை.
ஆஸ்திரேலியாவிற்கு சுற்று பயணம் சென்றுள்ள தென் ஆப்பிரிக்கா அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாட உள்ளது. அதன் முதல் போட்டி பெர்த்தில் நாளை இந்திய நேரப்படி காலை 8.50 மணிக்கு துவங்க உள்ளது. ஆருன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் ஆர்ச்சி ஷார்ட், ஹெட், ஷேன் மார்ஷ், மேக்ஸ்வெல், ஸ்டோனிஸ் போன்ற பேட்ஸ்மென்களும், பட் சிம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் கொல்டர் நெய்ல், ஹஸ்சில்வுட் போன்ற வேகபந்து வீச்சாளர்களும் இடம் பெற்று உள்ளனர். டியு பிளேசிஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணியும் ஆஸ்திரேலியாவிற்கு எந்த வகையிலும் சலைத்த அணி அல்ல. அந்த அணியில் டி ஹாக், மார்க்ரம், டேவிட் மில்லர் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களும், ஸ்டெய்ன், ரபாடா, லுங்கி நிகிடி, மோரிஸ் போன்ற வேகபந்து வீச்சாளர்களும் இடம் பெற்று உள்ளனர். தற்போது உள்ள ஒரு நாள் கிரிக்கெட் அணிகளில் தலைசிறந்த வேகப்பந்து வீச்சை கொண்ட இரு அணிகளும் முற்றிலும் வேக பந்து வீச்சுக்கு உகந்த பெர்த் மைதானத்தில் மோதுவதால் கிரிக்கெட் ரசிகர்களுக்கு இடையே இப்போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது