கஜா புயலின் எதிரொலியாக டெல்டா மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது.
ஆறு நாட்கள் ஆகியும் இன்னும் அடிப்படை உதவிகள் கூட மக்களைச் சென்றடையவில்லை. மரங்களை அகற்றினால் கூட மக்களின் பிரச்சனை ஓரளவுக்கு சரியாகும் ஆனால், புயலில் விழுந்த மரத்தைக் கூட அகற்றவில்லை. மின்கம்பங்களை அகற்றி அவற்றை நடும் பணி கூடத் துவங்கவில்லை. ஆனால் மூன்று நாட்களில் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறி இன்றுடன் ஆறுநாட்கள் ஆகிவிட்டது.
இன்னும் பல மாதங்கள் ஆனால் கூட வருவதற்க்கான வழிகள் இல்லை என்று அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
செல்போன் டவருக்கு கூட மின்சாரம் இல்லாததால் சிக்னல் பிரச்சனையும் இன்னும் தீரவில்லை.இவற்றைக் கூடவா சரிசெய்ய முடியாது.
அனைத்து ஊர்களிலும் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. குழாய்களுக்கு எந்த வித பாதிப்பும் இல்லை. ஒரு ஜெனரேட்டர் மூலம் மோட்டாரை இயக்கினால் கூட அனைத்து ஊர்மக்களுக்கும் குடிநீர் பிரச்சனை வராது. ஆனால் இவர்கள் டேங்கர் மூலம் தண்ணீர் சப்ளை செய்ய வேண்டிய அவசியம் என்ன?
90 சதவீத பணிகள் துவங்கப்படவே இல்லை என்ன கொடுமை இது??
திறமையற்ற திட்டமும், செயலும் எந்தக் காலத்திலும் இன்னல்களைத் தீர்க்கப் போவதில்லை.யார் மீது பழி போட்டும் இன்னல்கள் தீரப் போவதில்லை.
விழுந்த மரங்களை அகற்றவில்லை, வீடு இழந்தவர்களுக்கு ஒரு போர்வை துணி கூடக் கொடுக்க ஆகவில்லை.இது தான் போர்க்கால அடிப்படையா?
பக்கத்து மாவட்டங்கள்மூலம் அனைத்து உதவிகளையும் செய்ய வழிகள் உள்ளன.அதைக் கூடச் செயல்படுத்தவில்லை.திருச்சியிலிருந்து மூன்று மணி நேரத்தில் அனைத்து உதவிகளும் மக்களைச் சென்று அடையக்கூடும்.ஆனால் 160 மணி நேரம் ஆகியும் கூட ஒரு லிட்டர் தண்ணீர் கூட அங்குச் சென்று அடையவில்லை. இது தான் போர்க்கால அடிப்படை என்று புரிகிறது.
மின்கம்பங்களுக்கு இடையில் கான்கிரீட் போட்டு இருந்தால் இவ்வளவு பாதிப்பு வந்திருக்காது. ஒரு மீட்டர் ஆழத்தில் மின்கம்பங்களை நட்டால் காற்று அடித்தால் விழாமல் என்ன செய்யும்.அடிப்படை முன்னெச்சரிக்கை யோசனை கூடச் கிடையாது
உலக நாடுகள் மின்சாரத்துறையில் மாற்றங்கள் எங்கேயோப் போய்விட்டன.ஆனால் இங்குச் சுதந்திரம் அடைந்ததிலிருந்து எந்த வித மாற்றமும் இல்லை.ஆனால் மின்கட்டணம் வசூலிப்பதில் மட்டும் மின்னியல் இயந்திரம், பஸ்கட்டணத்தில் மின்னியல் இயந்திரம், போக்குவரத்து அலுவலகத்தில் மின்னியல் இயந்திரம் இன்னும் எங்கெல்லாம் எங்களது பணம் வசூலிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் மின்னல் வேகம்.
ஆனால் இவ்வளவு பணம் வசூலிக்கப்பட்டும் அவர்களது துறையில் எந்த விதமான முன்னேற்றம் உண்டா என்றால்? இல்லை
காலாவதியான பழைய முறையைப் பயன்படுத்துவதால் அரசாங்கத்திற்கு இழப்பு மக்களுக்குப் பேரிழப்பு.
எந்த ஒரு பேருந்து நிலையத்திலாவது ஏதாவது மாற்றம் ஏற்பட்டு இருக்கும் என்று எதிர்பார்த்தால் சுதந்திரம் அடைந்ததிலிருந்து எந்த விதமான மாறுதலும் கிடையாது.
உலகம் எங்கே சென்று கொண்டு உள்ளது. ஆனால் பேருந்து நிலையத்தை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என தெரியாதவர்களிடம் என்ன சொல்லி என்ன ஆகப்போகிறது.
ஓட்டு இயந்திரத்தில் மட்டும் மின்னியல் இயந்திரம்.ஏனென்றால் இவர்களால் எண்ணிக்கை கூடப் பொறுத்துக் கொள்ள இயலாது உடனே பதவியில் அமர வேண்டும் என்ற வெறி, இதே வேகத்தை மற்ற துறையில் காட்டலாமே!
எந்தத் துறை அமைச்சருக்காவது மெயில், டுவிட்டர், வாட்சப், போன் வசதி, அடிப்படை அனுபவ அறிவு உண்டா என்றால் இல்லை. பின்பு இவர்களை எவ்வாறு தொடர்பு கொள்வது, அப்படி தொடர்பு கொண்டால் பதில் அளிப்பார்களா என்றால் இல்லை. ஆனால் விவாத மேடை அதுவும் டிவி விவாத மேடைகளில் மட்டும் வீர ஆவசே பேச்சு என்ன ஒரு நடிப்பு, ஆளுங்கட்சி, எதிர்கட்சியைக் குறை சொல்லுவதும், எதிர்கட்சி ஆளுங்கட்சியை குறை சொல்லுவதும் வாடிக்கை இதனால் மக்களுக்கு என்ன பயன் வெட்கக்கேடு, எதிர்கட்சி அரசியல் செய்கிறார்கள் என்றால் நீங்கள்,
உங்களது வேலையை ஒழுங்காகப் பார்த்தால் எங்கிருந்து வரும் விமர்சனம். புரிந்து கொள்ளும் அளவிற்கு தகுதி இல்லை. தகுதிக்கு மீறிய பதவி! அளவுக்குமீறிய பேச்சு! அரசியல் செய்யாமல் வெங்காயமா செய்வார்கள் ஏன் அவர்களுக்கு இடம் கொடுக்கும் அளவுக்கு வேலை செய்கிறீர்கள். உங்களது வேலையைச் செய்யாமல் அடுத்தவரைக் குறை கூறுவதை நிறுத்துங்கள்.
எவ்வளவு மரங்கள் நமது மாநிலத்தில் உள்ளது என்று எந்தவிதமான கணக்கெடுப்பு உண்டா என்றால் எந்தவிதமான மண்ணாங்கட்டியும் கிடையாது அப்புறம் எப்படி இவ்வளவு மரங்கள் விழுந்து விட்டது என்று மட்டும் கணக்கு சொல்கிறார்கள்என்றால் புரியாத புதிர் பிளஸ்க்கும், மைனஸ்க்கும் வித்தியாசம் தெரியாதவர்களிடத்தில் கணக்கு கேட்பது நமது தவறுதான்.
ஒருநாள் கரண்ட் பில் லேட்டானால் கூடக் கரண்ட் கனெக்ஷன் கட் செய்து விடுகிறது மின்சார வாரியம். இவ்வளவு நாள் மின்சாரம் தராமல் இருப்பதே நுகர்வோர் சட்டப்படி குற்றம். உங்களுக்கு வருவாய் தந்தால் சட்டம் எங்களுக்குக் பாதிப்பு என்றால் கிடையாதா? மங்குனி அதிகாரிகள் எந்த அரசுத்துறை ஊழியர்க்காவது அடிப்படை கணினி அறிவு உண்டா? என்றால் இல்லை. அப்புறம் எப்படி வேலை செய்வது அப்படித்தான் நடக்கும்.
பழைய பஞ்சாங்காம்களை வைத்துக் கொண்டு எங்கு டிஜிட்டல் இந்தியா வருவது ஒருவேளை சோற்றுக்கு வழி இல்லை ஆனால் சர்க்கரை பொங்கல் போலப் பேசுவது. இது மக்களின் அதிகாரத்தின் பலனை மக்கள் அனுபவிப்பதில்லை இடையில் உள்ளவர்கள் அனுபவிப்பது. மக்களுக்கு எப்பொழுதாவது அதுவும் ஒரு சில பகுதிகளில் மட்டுமே அவசர உதவி தேவைப்படுகிறது. அவற்றைக் கூடச் சரி செய்ய வழியில்லை என்னவென்று கூறுவது வெட்கக்கேடு!