மார்ச் மாதம் 15 ஆம் தேதி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெற்றிகரமாக தனது இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ளது. இதையொட்டி வரும் வெள்ளிக்கிழமை 9 மணியளவில் சென்னை அசோக் நகரில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கழகத்தின் துணை பொது செயலார் டிடிவி தினகரன் அவர்கள் கொடியேற்ற உள்ளார். இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கபடுகிறது. இது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெளியிட்டு உள்ள அறிக்கை பின்வருமாறு…
