புல்வாமாவில் உள்ள சிஆர்பிஎஃப் ஊழியர்களை தாக்குவது வெறுக்கத்தக்கது. இந்த கொடூரமான தாக்குதலை நான் கடுமையாக கண்டிக்கிறேன். எங்கள் தைரியமான பாதுகாப்பு வீரர்களின் தியாகம் வீண் போகாது. முழு தேசமும் துணிச்சலான தியாகிகளின் குடும்பங்களை தோள்களில் சுமக்க தயாராக நிற்கிறது. காயமடைந்தவர்கள் விரைவாக மீண்டு வரட்டும் என நரேந்திர மோடி தெரிவித்து உள்ளார்.புல்வாமாவில் நடந்த தாக்குதலின் பின்னணி குறித்து உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஜி மற்றும் பிற உயர்மட்ட அதிகாரிகளிடம் பேசி வருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.
வெறுக்கத்தக்க செயல் _ மோடி
