
வெண்டிஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி பிரிட்ஜ் டவுனில் நேற்று தொடங்கியது.
இதில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் வெண்டிஸ் அணி 8 விக்கெட்களை இழந்து 264 ரன்கள் எடுத்து உள்ளது. அந்த அணியின் ஷாய் ஹோப், ரோஸ்டன் ஷேஸ் அரைசதம் அடித்து ஆட்டம் இழந்தார். கிட்மையர் 60 பந்துகளில் 56 ரன்கள் உடன் களத்தில் உள்ளார்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வெண்டிஸ் அணி கடைசி 10 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது. இங்கிலாந்து அணியின் ஆண்டர்சன் 4 விக்கெட்களையும், ஸ்டோக்ஸ் 3 விக்கெட்களையும் கைப்பற்றி உள்ளனர்.