இந்திய மகளிர் கிரிக்கெட் மிதாலிராஜ் இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டார். அதனால் கிரிக்கெட் வட்டராத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ்சில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் இந்திய மகளிர் அணி எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக 112 ரன்கள் எடுத்துப் படுதோல்வி அடைந்தது.
இதனால் இந்தியக் கிரிக்கெட் வாரியம் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது.
லீக் ஆட்டங்களில் சிறப்பாகச் செயல்பட்ட மிதாலிராஜ் முக்கிய ஆட்டங்களில் சேர்க்கப்படவில்லை. இதுகுறித்துக் கடுமையான விமர்சனங்கள் வந்தன.
இந்த நிலையில் மிதாலி முக்கிய இமெயில் ஒன்றை கிரிக்கெட் மேலாளருக்கு அனுப்பி உள்ளார்.
அதில் அவர் தான் மனவேதனையில் இருப்பதாகவும் தன்னைத் தலைமை பயிற்சியாளர் பல கட்டங்களில் அவமானப்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.
எல்லா பிரச்சினைகளுக்கும் தலைமை பயிற்சியாளர் ரமேஷ் பாவரே காரணம் எனக் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
வீரங்கனை பகிரங்க குற்றச்சாட்டு?
