விஷால் நடிப்பில் வெளிவந்த சண்டைக்கோழி வெற்றி சந்திப்பு ஆந்திரவில் நடைபெற்றது. அப்பொழுது பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.
யாருடன் திருமணம்?
வரலட்சுமி உடனா என நிருபர்கள் கேட்டதர்க்கு, வரலெட்சுமி எனது பால்யநண்பர், என் மனதுக்கு நெருக்கமானவர். சந்தர்ப்பம் வரும்பொழுது யாரை திருமணம் செய்யபோகிறேன் எனத் தெரிவிக்கிறேன் என்று தெரிவித்தார்.
சில தினங்களுக்கு முன் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த நடிகை வரலட்சுமி பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அவருக்கும் விஷாலுக்கும் காதல் என வதந்திகள் உலா வருகின்றன. உண்மையா பொய்யா என தெரியவில்லை. அதற்கு தகுந்தாற்போல் பதிலளித்துள்ளார்.
விஷால் திருமணம் குறித்து கேட்ட கேள்விக்கு அது அவரிடம்தான் கேட்க வேண்டும். எனவும் காலம் தாழ்த்தாதீர்கள் என கூறிவிட்டேன். சங்க கட்டிடம் கட்டியதுதான் திருமணம் என கூறி உள்ளார். அவர்களுக்கே தெரிந்த உண்மை.