பல கட்சிகள் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி கொண்டு இருக்கும் வேளையில் 28 ஆம் தேதி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார் என டிடிவி தினகரன் அவர்கள் அறிவித்து உள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது குறித்து ஒரு வாரத்தில் தெரிவிக்கப்படும் என சில நாட்களுக்கு முன் கூறி இருந்தார். மேலும் அவர் அதிமுக, பாமக, பிஜேபி கட்சிகள் கூட்டணி வைத்து இருப்பது அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கயிற்றை கட்டி கொண்டு கிணற்றில் குதிப்பதர்க்கு சமம் எனவும் விமர்சித்து இருந்தார்.
இந்நிலையில் தற்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்த டிடிவி தினகரன் பாராளுமன்ற தேர்தலில் 38 தொகுதிகளில் போட்டியிடலாம் என்று நினைப்பதாகவும், 2 கட்சிகளுடன் கூட்டணி பேசிக்கொண்டு இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.
மேலும் இந்த தேர்தலில் மாபெரும் வெற்றி பெறுவோம் எனவும் வருகிற 28-ந்தேதி வேட்பாளர்களை அறிவிக்க உள்ளதாகவும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி அணி என்பதில் முதல் அணியாக இருக்கப்போவது அ.ம.மு.க.தான். மக்கள் விமர்சிக்காத கட்சிகளுடன் கூட்டணி வைக்க போவதாகவும் முதல்-அமைச்சர் வேட்பாளர் என்றும், மாற்றம், ஏமாற்றம் என்று அறிவித்து போட்டி போட்டுக்கொண்டு பிரசாரம் செய்தனர். அவரே வெற்றி பெறாத நிலையில் பெரிய கட்சி என்று நினைக்கிறார்கள்.
இந்த தேர்தலில் மாற்றம் கொண்டு வருவோம். சட்டமன்றத்தில் ஜெயலலிதா படம் வைக்கக்கூடாது என்று தே.மு.தி.க. தலைவர் சொன்னார். எனவே அவர்களுடன் கூட்டணியில் செல்ல முடியாது எனவும் டிடிவி தினகரன் அவர்கள் கூறியுள்ளார்.இதன் மூலம் தேமுதிக உடன் கூட்டணி வைக்க போவதில்லை என்பதையும் தெளிவுபடுத்தி உள்ளார் தினகரன்.