ராகுல் காந்தி இன்று தெலுங்கானாவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்பொழுது அங்கு உரையாற்றினார்.
தெலுங்கானாவில் தங்கள் வெற்றி பெற்றால் ஒரே தவணையில் இரண்டு லட்சம் வரை உள்ள விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவித்துள்ளார். அரசியல்வாதிகள் தேர்தல் நேரத்தில் மட்டும் விவசாய கடன்கள் தள்ளுபடி எப்படி கண்ணுக்கு தெரிகிறது என்று தெரியவில்லை. ஆளுங்கட்சியாக இருக்கும்போது பேசுவது கிடையாது. எதிர்க்கட்சியாக இருந்தால் கண்டிப்பாக தள்ளுபடி உண்டு என பேசுவது. எது நடந்தாலும் மக்களுக்கு குறிப்பாக விவசாயிகளுக்கு நன்மை நடந்தால் சரி. மேலும் விரைவில் சந்திரசேகர ராவ் தலைமையிலான அரசு முடிவுக்கு வரும். மக்களால் தூக்கி எறியப்பட கூடிய நாட்கள் விரைவில் உள்ளது எனவும் நாடு முழுவதும் விவசாயிகளின் தற்கொலை அதிகரித்துள்ளது என்றும் கடுமையாக தாக்கி பேசினார். நாட்டை பிளவுபடுத்த முதல்முறையாக பிரதமர் முயற்சித்து வருகிறார் என்றும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு பயப்படுகின்றார்கள் எனவும் கூறியுள்ளார்.