விலை குறைப்பு

உற்பத்தி வரியை குறைக்கக் கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பலமுறை மத்திய
அரசுக்குக் கோரிக்கை விடுத்தும் மத்தியஅரசு செவிமெடுக்க வில்லை. இதே நிலை தொடர்ந்தால்,
பெட்ரோல், டீசல் விலை லிட்டர் 100 ரூபாயை எட்டும் என்ற நிலை வந்தது.

அதிகரித்துவரும் விலை உயர்வைக் கருத்தில் கொண்டு, பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு
ரூ.2.50 குறைக்கப்படும் என்று மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.
இந்த விலை குறைப்பு உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும், இதேபோல மாநில அரசுகளும்
வரிகளைக் குறைக்க வேண்டும் என்றும் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி
வலியுறுத்தியுள்ளார்.
அருண் ஜேட்லி வார்த்தையை ஏற்று குஜராத், மகாராஷ்டிரா அரசுகளும், பெட்ரோல், டீசல்
விலையில் லிட்டருக்கு ரூ.2.50 பைசா குறைத்துள்ளன. இதையடுத்து, அந்த இரு மாநிலங்களிலும்,
பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்க ரூ.5 குறையும்

இந்நிலையில் பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை ரூ.2.50 பைசா குறைக்கப்படும் என்று
மத்தியஅமைச்சர் அருண் ஜேட்லி இன்று அறிவித்தார். டெல்லியில் இன்று நிருபர்களுக்கு அவர்
அளித்த பேட்டியில் கூறியதாவது:
நாட்டில் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கருத்தில் கொண்டு பெட்ரோல்,
டீசல் உற்பத்தி வரியை லிட்டர் ஒன்றுக்கு ரூ.1.50 பைசா குறைத்துள்ளோம்.
எண்ணெய் நிறுவனங்களும் பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ஒரு ரூபாய் குறைத்துள்ளன.
ஆக மொத்தம் பெட்ரோல், டீசல் லிட்டருக்கு ரூ.2.50 பைசா குறைக்கப்பட்டுள்ளது. இது உடனடியாக
நடைமுறைக்கு வருகிறது.
இந்த உற்பத்தி வரி குறைப்பின் மூலம் மத்திய அரசுக்கு ரூ. 10 ஆயிரத்து 500 கோடி வருவாய்
பற்றாக்குறை ஏற்படும். மக்களின் சிரமங்களை அறிந்து மத்திய அரசு குறைத்தது போல், மாநில
அரசுகளும் வாட் வரியை குறைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அருண் ஜேட்லி தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *