இந்தியன் பிரிமியர் லீக்கில் இன்று நடைபெறும் போட்டியில் பெங்களூர் மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன. இரவு 8 மணிக்கு துவங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. விராட் கோலி மற்றும் பும்ரா களத்தில் இன்று சந்திப்பதால் ரசிகர்கள் இடையே இந்த போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த இரண்டு அணிகளுமே தங்கள் முதல் போட்டியில் தோல்வி அடைந்து உள்ளதால் இன்று வெற்றி பெற கடுமையாக போராடும்.பெங்களூர் சின்னசாமி மைதானமானது சேஸிங் செய்ய சாதகமானது என்பதால் டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது.