2019 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ரோஹித் ஷர்மா அமைத்து தந்த சிறப்பான அடித்தளத்துக்கு பிறகு கோலியின் இன்னிங்ஸ் அதனை நிறைவு செய்தது. சாம்பியன் கோப்பை இறுதி போட்டியை போலவே இந்திய கேப்டன் கோலிக்கும், பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் அமீருக்குமான போட்டி நிலவியது. இந்த முறையும் கோலி அமீர் பந்தில் ஆட்டமிழந்தார். ஆனால் இந்த முறை தவறு கோலியுடையது.
முன்னதாக 11000 ரன்களை கடந்து ஆடிக்கொண்டிருந்த கோலி அமீரின் பவுண்ஸரை அடிக்க முயன்றார். அது கோலியின் பேட்டில் பட்டது போன்ற தோற்றத்துடன் கீப்பர் கைக்கு சென்றது.
சர்ஃப்ராஸ் அப்போது கூட அப்பீல் செய்யவில்லை. ஆனால் கோலி பெவிலியனை நோக்கி நடக்க துவங்கிவிட்டார்.
பின்னர் பெவிலியனில் அமர்ந்து ரீப்ளேவை பார்த்த கோலிக்கு அது அவுட் இல்லை என்பது புரிய வந்தது.
பின்னர் அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக தலையசைத்த கோலி. வீரர்களிடம் தனது செயலை விளக்கி கொண்டிருந்தார்.
குறைந்த போட்டிகளில் 11,000 ரன்களை கடந்த சர்வதேச வீரர் என பெருமையை கோலி பெற்றார்.
சச்சின் டெண்டுல்கர் 276 போட்டிகளில் செய்ததை கோலி வெறும் 222 போட்டிகளில் செய்து சாதனை படைத்துள்ளார்.
நேற்றைய போட்டியில் 7 பவுண்டரியுடன் 65 பந்தில் 77 ரன்கள் குவித்தார்