விராட் கோலியை சோதித்த ரஸ்ஸல்

இந்தியன் பிரீமியர் லீக்கில் நேற்று நடந்த போட்டியில் பெங்களுர் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களுர் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்களை இழந்து 205 ரன்கள் எடுத்தது .அதிகபட்சமாக விராட் கோலி 49 பந்துகளில் 84 ரன்களும்,  டி வில்லியர்ஸ் 32 பந்துகளில் 63 ரன்களும் எடுத்தனர்.

206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 17 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 153 ரன்கள் எடுத்து தடுமாறி கொண்டு இருந்தது.18 பந்துகளில் 53 ரன்கள் தேவை என்ற பொது களத்தில் இறங்கிய ரஸ்ஸல் 5 பந்துகள் மீதம் வைத்து போட்டியை முடித்தார்.

ரஸ்ஸல் 13 பந்துகளில் ஏழு சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி உடன் 48 ரன்கள் அடித்த ரஸ்ஸல் ஸ்டிரைக் ரேட் 369.23 என வைத்து மிரள வைத்தார். இவரது அதிரடி ஆட்டத்தின் மூலம் கொல்கத்தா 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.5 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி தலைமையிலான பெங்களுர் அணி இதுவரை ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *