சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டை வாங்க விடிய விடிய வரிசையில் காத்திருக்கும் ரசிகர்கள். 12-வது ஐபிஎல் தொடர் வருகிற 23-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. அதன் முதல் போட்டி சென்னையில் நடக்க இருக்கிறது. முதல் கட்டமாக நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டிக்கெட் வினியோகம் இன்று (16.03.19) காலை 11:30 மணிக்கு ஆரம்பம் ஆகிறது. டிக்கெட்டை பெறுவதற்காக விடிய விடிய ரசிகர்கள் வரிசையில் காத்திருந்தனர். சென்ற ஆண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக பல்வேறு அமைப்புகள் நடத்திய போராட்டத்தால் சென்னையில் ஒரு போட்டியை தவிர மற்றவை திட்டமிட்டபடி சென்னையில் நடக்கவில்லை. இந்த முறை தேர்தல் வருவதால் ஏதேனும் குளருபடிகள் நடக்க வாய்ப்பிருப்பதாக கருதி முதல் நாள் ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். சேப்பாக்கம் மைதானம் வளாகத்தில் தனியாக டிக்கெட் கவுண்டர்கள் அமைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. ரூபாய் 1,300-ல் தொடங்கி 2500, 5000, 6500 வரை டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.