விஜய் சேதுபதியை வைத்து பண்ணையாரும் பத்மினியும் படத்தை இயக்கிய அருண்குமார், மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியை வைத்து சிந்துபாத் படத்தை இயக்கியிருக்கிறார். படப்பிடிப்பை முடித்து படத்தின் புரமோஷன் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை கிளாப் போர்டு புரொடக்ஷன் சார்பில் சத்யமூர்த்தி கைப்பற்றியிருக்கிறார்.
இந்த படத்தில் விஜய் சேதுபதி – அஞ்சலி இவர்களுடன் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கே புரொடக்ஷன்ஸ் சார்பில் ராஜராஜன் மற்றும் வன்சன் மூவிஸ் சார்பில் ஷான் சுதர்சன் இணைந்து தயாரித்துள்ளனர்.
படத்தின் முதல் சிங்கிள் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது.