சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தை இப்போது தமிழக கட்சி தலைவர்கள் நேரில் சந்தித்து பேசி வருவது பரபரப்பு செய்தியாக இருந்து வருகிறது.
நேற்று, திருநாவுகரசர் சந்தித்து பேசி வந்ததை தொடர்ந்து, இன்று முதலில் ரஜினிகாந்த் அதனை தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களும் சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டிற்கு சென்று வந்து கொண்டிருக்கிறார்கள்.இதில் இன்று சந்தித்த ரஜினிகாந்த் மற்றும் மு.கஸ்டாலின் இருவருமே விஜய்காந்தின் உடல்நிலை குறித்து சந்தித்ததாகவே கூறுகிறார்கள்