அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் தன் டிவிட்டர் பதிவில் தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் விசாரணை தாமதம் ஏன்? அரசியல் பின்னணிகள் உள்ள இந்த வழக்கை நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்தி, விசாரணையைத் துரிதப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டு உள்ளார்.