வார ராசி பலன் ( 24-05-2019 முதல் 30-05-2019 வரை)

வார ராசி பலன்( 24-05-2019 முதல் 30-05-2019  வரை)

கணித்தவர் ஜோதிட  ஆசிரியர்

ஜெ.முனிகிருஷ்ணன்.,M.E.,D.Astro.,

(அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)நட்புக்கும், பாசத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கும் மேஷ ராசி அன்பர்களே !

இந்த வாரம் உங்களுக்கு மிக சிறப்பான வாரமாக இருக்கும்,வீண் அலைச்சலுக்குப் பிறகே எடுத்த முயற்சிகளில் வெற்றி ஏற்படும்,திடீர் பணவரவு உங்களுக்கு மகிழ்ச்சியை தரும். மனைவி மக்களால் மகிழ்ச்சியும், உறவினர்கள் நண்பர்களால் எதிர்பாராத உதவியும் கிடைக்கும். ஆரோக்கியமும், பொருள் சேர்க்கையும் ஏற்படும்.

எதிரி தொல்லை நீங்கும், நீண்ட நாள் எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். கல்வி கேள்விகளில் மனம் ஈடுபடும், வெளியூர் பிரியாணங்களின் மூலம் நல்ல ஆதாயம் ஏற்படும். விளையாட்டு வீரர்கள் போட்டிகளில் வெற்றி வாகை சூடுவார்கள். பெரியோர் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

வயிற்றுக் கோளாறு நோய்கள் ஏற்படும்.உணவு கட்டுப்பாடு வேண்டும், குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடைபெறும், பெற்றோர்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள் அவர்களால் பொருள் ஆதாயம் ஏற்படும்.

(கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)சமாதானத்தையும், அமைதியையும் விரும்பும் ரிஷப ராசி அன்பர்களே :-

இந்த வாரம் உங்களுக்கு பிள்ளைகளால் சந்தோஷம் ஏற்படும். குடும்பத்தில் சந்தோஷம், சகோதர வழியில் ஆதாயம், வண்டி வாகன யோகம் ஏற்படும், பூமி யோகம் ஏற்படும். பேச்சில் கவனம் தேவை. அதிகாரிகளிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விலகும். பிரயாணங்களினால் ஆதாயம் ஏற்படும்.

தன வரவு சிறப்பாக இருக்கும், மனைவியால் சந்தோஷம் ஏற்படும். உறவினர் உதவி கிடைக்கும், பிள்ளைகளின் கல்விக்காக எடுத்த முயற்சி வெற்றியைத் தரும், மாணவர்கள் கல்விக்காக எடுத்த முயற்சிகளில் மேன்மை அடைவார்கள். யாரிடம் வீண் விவாதங்கள் செய்ய வேண்டாம், தேவையில்லாத பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

துணிவுடன் செய்யும் காரியங்களில் வெற்றி ஏற்படும். திருமணமாக வேண்டியவர்களுக்குத்  திருமணப் பேச்சுக்கள் நடைபெறலாம், ஒரு சிலருக்கு திருமணமும் நடைபெறலாம். தெய்வ பக்தியில் மனம் ஈடுபடும்.

(மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)எடுத்த காரியத்தையும் கொடுத்த வாக்கையும் காப்பாற்றும் மிதுன ராசி அன்பர்கள்.

இந்த வரம் உங்களுக்கு சுமாரான வாரமாக இருக்கும், எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை தேவை, புதிய ஒப்பந்தங்கள், புதிய முயற்சிகளைத் தவிர்க்கவேண்டும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்படும்.

மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக வேண்டி வரும் தனவரவு சிறப்பாக இருக்காது. பிடிவாத குணம் நிரம்பி இருக்கும் இதனால் எதிர்பாராத நன்மை ஏற்படும், புதிய தொழில் தொடங்க நல்ல வாய்ப்பு ஏற்படும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும்.

வீட்டில் உள்ள பெரியோர்களின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மருத்துவ செலவு ஏற்படும் கல்விக்காக எடுத்த முயற்சிகளில் தடை, தாமதம் ஏற்படும், இளைய சகோதரனிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். கணவன் மனைவி கருத்து வேறுபாடு ஏற்படும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும், புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும்.                                                                                                                                                                                                                               -(புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும், மரியாதை கொடுக்கும் கடகராசி அன்பர்களே !

இந்த வாரம் உங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும், வாழ்க்கையிலும், வழக்கு முதலியவற்றிலும் வெற்றி ஏற்படும். செலவுகளைக் கட்டுக்குள் அடக்கி மன நிம்மதி ஏற்படும். தெய்வ பக்தியில் ஆர்வம் ஏற்படும். உங்களுக்கு இந்த வாரம்  சிறு சிறு தடைகள், குழப்பங்கள் ஏற்பட்டாலும் நல்ல பலனை சுவைப்பீர்கள்.

பெரியோர் பாராட்டையும் அவருடைய நன் மதிப்பையும் பெறலாம் பெண்களால் மகிழ்ச்சி ஏற்படும். போட்டி பந்தயங்களில் வெற்றி ஏற்படும். பொருள் சேர்க்கை ஏற்படும். கணவன் மனைவியிடையே சந்தோஷம் ஏற்படும். தனலாபமும் ஏற்படும். பதவி உயர்வு, அரசாங்கத்தால் லாபம் ஏற்படும்.

ஆசிரியர்கள் மேன்மை அடைவார்கள் உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. மாணவர்கள் நினைத்த பாடப்பிரிவில் சேர்வார்கள். தர்ம சிந்தனை மேலோங்கும். செல்வ செல்வாக்கு அதிகரிக்கும் உடல் ஆரோக்கியம் பெறும்.

(உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)எதிலும் துடிப்புடனும், ஈடுபாட்டுடனும்  ஈடுபடும் சிம்ம ராசி அன்பர்களே!

இந்த வாரம் உங்களுக்கு, மனைவி மக்களால் மகிழ்ச்சியும் மன அமைதியும் ஏற்படும் வாரமாக இருக்கும். விரோதிகள் நண்பர்களாக மாறுவார்கள் வீடுமனை வாங்குதல் கைகூடும் பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். வாகனங்கள் வாங்க வாய்ப்புகள் ஏற்படும் செய்தொழிலில் அதிக நன்மை ஏற்படும் பதவி    உயர்வு, வேலை மாற்றம் ஏற்படும்.  பொருளாதார முன்னேற்றமும் மன மகிழ்ச்சிக்கான நிகழ்வுகளும் ஏற்படும். புதிய நண்பர்கள், ஆடல் பாடல்களில் மனம் ஈடுபடும். வெளியூர் பிரயாணங்களில் நல்ல பலன் கிடைக்கும். வாரத்தின் இறுதியில் புதிய முயற்சி, புதிய ஒப்பந்தம் போன்றவற்றில் ஈடுபடாமல் இருப்பது நல்லது,

மனநிம்மதி தொட்டதெல்லாம் பொன்னாகும். செல்வாக்கு அதிகரிக்கும் புகழ் ஏற்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். மொத்தத்தில் சமுதாய அந்தஸ்து பெறுவீர்கள். மணமாகாதவர்களுக்கு மணமாகும். குழந்தையில்லாதவர்களுக்கு பிள்ளைப்பேறு ஏற்படும்.

(உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)முன் வைத்த காலை பின் வைக்காமல் வெற்றி நடை போடும் கன்னி ராசி அன்பர்களே !

இந்த வாரம் உங்களுக்கு வீட்டில் மகிழ்ச்சியும், மன அமைதியும், மனைவி மக்கள் ஆதரவும் இருந்து வரும், எதிர்பார்த்த இடங்களில் உதவி கிடைக்காவிட்டாலும், எதிர்பாராத உதவி கிடைக்கும் புதிய நண்பர்களால் நன்மைகள் ஏற்படும்.

நீங்கள் எதிர்பார்த்த காரியங்களில் எதிர்மறையான முடிவு ஏற்படும். எதிரிகள் எதிர்ப்பு விலகும், வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். பெண்களால் மகிழ்ச்சி ஏற்படும். வெளியூர் பிரயாணங்களில் தனவரவு நல்ல ஆதாயம் கிடைக்கும்.போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும்.

இளைய சகோதரனிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும். தாயாரின் உடல் நலனில் கவனம் தேவை பங்காளிகளிடம் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. அரசாங்கத்தால் லாபம் ஏற்படும். வழக்குகளில் நல்ல முடுவு ஏற்படும்.

(சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)வெள்ளை மனம் கொண்டு எளிதில் யாரையும் எதிலும் நம்பி விடும் பழக்கம் உடைய துலா ராசிஅன்பர்களே !

இந்த வாரம் உங்களுக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதற்கான வழிவகைகள் ஏற்படும், பொருளாதார முன்னேற்றம் ஏற்படும் விவசாயிகளுக்கு நல்ல பலன் ஏற்படும், மனையோகம் ஏற்படும், வழக்குகளில் நல்ல திருப்பம் ஏற்படும், புதிய நண்பர்கள் மூலம் லாபம் பெறுவீர்கள்.

மனைவி மக்கள் மகிழ்ச்சி ஏற்படும் வண்ணம் நடந்து கொள்வார்கள். அவர்களால் பணத் தட்டுப்பாடு குறையும், தொழிலில் ஏற்பட்ட வீண் அலைச்சல் குறையும், எதிரிகள் நண்பர்களாக மாறுவார்கள், வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவை காதலில் வெற்றி ஏற்படும்.

எந்த காரியத்தையும் துணிவுடன் செய்து அதில் அதிக நன்மை அடைவீர்கள். முன் கோபம் காரணமாக நெருங்கிய நண்பரிடம் விரோதம் ஏற்படும். குழந்தை பாக்கியம் ஏற்படும் சாஸ்தர ஞானம் ஆன்மீக சிந்தனை சிறப்பாக இருக்கும்.

(விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)எல்லோரிடமும் நல்ல பெயரை எளிதில் சம்பாதித்து விடும் விருச்சிகராசி அன்பர்களே !

இந்தவாரம் உங்களுக்கு பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும், பல வகையில் மேன்மை ஏற்படும். உறவினர்கள் நண்பர்கள் பக்க பலமாக இருப்பார்கள், புத்திரர்களால் சந்தோஷம் பணத்தட்டுப்பாடு குறையும், தாயாரின் உடல் நலனில் கவனம் தேவை, எதிரிகளின் தொல்லை நீங்கும்.       கடன் சுமை குறையும், வீண் விவாதங்கள் செய்வதை தவிக்கவும் இல்லையெனில் சில பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும் சுப விரயம் ஏற்படும். செய்தொழிலில் மாற்றம் ஏற்படும். வழக்குகளில் ஒரு திருப்பம் ஏற்படும், தெய்வ பக்தியில் மனதை செலுத்தினால் மன சஞ்சலம் தீரும்.    பூர்விகசொத்தில் இருந்த சிக்கல் விலகும்,. மனைவி மக்களால் மகிழ்ச்சி ஏற்படும். புதிய வீடுமனை வாங்கும் நிலை ஏற்படும். வீட்டில் சுபநிகழ்ச்சி உறவினர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும்.

                                      (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)உழைப்பின் மூலமாக மட்டுமே புகழை அடைய விரும்பும் தனுசு ராசி அன்பர்களே !

இந்த வாரம் உங்களுக்கு, எல்லாவிதத்திலும் முன்னேற்றமான வாரமாக இருக்கும். நண்பர்களும், எதிரிகளும் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். மறைமுகமான எதிர்ப்புகள் குறையும். செய்தொழிலில் ஆதாயமும் முன்னேற்றமும் ஏற்படும். மனைவிமக்களிடையே மன மகிழ்ச்சியும் ஏற்படும்.

எதிர்பாராத வகையில் பூமியோகம் ஏற்படும். பொருள் சேர்க்கை ஏற்படும். வீட்டிலும், வெளியிலும், கெளரவம் புகழ், மன மகிழ்ச்சியும் உண்டாக்கும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். எதிர்கால வாழ்க்கை முன்னேற்றத்திற்கான வழிவகைள் ஏற்படும். போட்டிபந்தயங்களில் வெற்றி ஏற்படும். வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள்

தாயார் உடல் நலனில் கவனம் தேவை. சகோதர வழியில் மேன்மை ஏற்படும். விருந்துகள் நடத்தவும், விருந்துகளை அனுபவிக்கவும் வேண்டிய சந்தர்ப்பங்கள் உண்டாகும். எதற்காகவும் பிறர் தயவை நாட வேண்டிய அவசியம் இருக்காது எதிரிகள் மறைவார்கள், கடவுள் பக்தி அதிகரிக்கும்.

(உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)மனசாட்சிக்கு விரோதமான காரிங்களை செய்யாத மகர ராசி அன்பர்களே !

இந்த வாரம் உங்களுக்கு நண்பர்களால் நன்மை ஏற்படும். வழக்குகளில் வெற்றி ஏற்படும். குடும்பத்தில் மங்களகரமான காரியங்கள் நடைபெறும். புதுமனை நிலம், வீடு வாங்க சந்தர்ப்பம் ஏற்படும். ஆரோக்கியம் அபிவிருத்தியடையும், பொருள் சேர்க்கையும்,

வாகனப் பிராப்தியும் ஏற்படும். கணவன் மனைவி உறவு மகிழிச்சிகரமாக இருக்கும். வீட்டிலும், வெளியிலும், கெளரவம் புகழ், மகிழ்ச்சியும் ஏற்படும். பணம் விரயம் ஏற்பட வாய்ப்புள்ளது. கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வண்டி வாகனத்தில் கவனத்துடன் செல்லவும்.

பெரியோர்களின் சந்திப்பு, உதவியும் கிடைக்கும். குழந்தை பாக்கியம் ஏற்படும். பதவி உயர்வு, புதிய வேலை வாய்ப்பு ஏற்படும். தாயாரின் உடல் நலனில் கவனம் தேவை. ஆடை ஆபரணங்கள் வாங்கி சந்தோசம் அடைவீர்கள். குடும்பத்தில் நிலவிய மனஸ்தாபம் விலகும். செய்தொழிலில் பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும்.

(அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)எல்லாரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட கும்ப ராசி அன்பர்களே!

இந்த வாரம் உங்களுக்கு பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத வகையில் வருந்தத்தக்க நிகழ்ச்சி நடைபெறலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண்பிடிவாதத்தை விட்டு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும்.    கணவன் மனைவி உறவு மன நிம்மதியை அளிப்பதாகஇருக்கும். பேச்சில் கவனம் தேவை வேண்டும். மற்றவருக்கு வாக்கு கொடுப்பதை தவிர்க்க, அரசாங்கத்தால் அனுகூலம் ஏற்படும், ஆசிரியர்கள், வங்கியில் வேலை செய்பவர் மேன்மை அடைவார்கள்.

அடுத்தவர் பிரச்சனையில் தலையிடாமல் இருப்பது நல்லது. குழப்பங்கள் நீங்க தெய்வவழிபடு நல்ல மன மாற்றத்தை தரும். தாயாரின் உடல் நிலையில் ஆரோக்கிய குறைபாடு ஏற்படும். பிள்ளைகளால் சந்தோசம் ஏற்படும். மாணவர்கள் எதிர்பார்த்த பாடப்பிரிவில் சேர்வார்கள்.

(பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)எதிலும் மனசாட்சிக்கு விரோதமான காரியத்தை செய்யாத மீனம் ராசி அன்பர்களே !

இந்த வாரம் உங்களுக்கு, அந்தஸ்து கெளரவம், புகழ் முதலியவற்றில் சிறப்பு ஏற்படும் வாரமாக இருக்கும். தர்ம சிந்தனையும் தர்ம காரியங்களில் ஈடுபடும் எண்ணம் ஏற்படும். பிள்ளைகளால் மகிழிச்சி ஏற்படும். குடும்பத்தினரிடம் கோபம் கொள்வதை தவிர்க்கவும்.

இளைய சகோதரனிடம் வாக்கு வாதம் ஏற்படும், இதனால் பிரிவினை ஏற்பட வாய்ப்புயுள்ளது வீட்டுக் கொடுத்து செல்வது நல்லது. சமுதாய தொடர்பு சிறப்பாக இருக்கும். மனைவி வழி சொந்தங்கள் மூலம் லாபம் பெறுவீர்கள்.

நீண்ட நாள் அவதிப்பட்ட நோயிலிருந்து விடுபடுவீர்கள், மனக்குழப்பங்களும் மனசஞ்சலமும் ஏற்படும். புதிய தொழில் தொடங்க இது நல்ல நேரம் இதன் மூலம் லாபம் அடைவீர்கள் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும், திருமணமுயற்சி கைகூடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *