வார ராசி பலன் 10/05/19 to16/05/19

கணித்தவர்
ஜோதிட ஆசிரியர்
J. முனிகிருஷ்ணன். M.E,D.Astro.,

(அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்)

அற்ப ஆசைகள் இல்லாத மேஷம் ராசி அன்பர்களுக்கு இந்த வாரம் முன்னேற்றமான வாரமாக அமையப்போகுது ,பொருள் சேர்க்கை ,ஆடை அணிகலன்கள் சேர்க்கை ,கல்வியில் மனம் முழுமையாக ஈடுபடும் ,பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும் ,நிலம் வாங்க விற்க நல்ல சூழ்நிலை அமையும்

போட்டி பந்தயங்களில் வெற்றி ,பெரியோர்களின் பாராட்டும் நன்மதிப்பும் கிடைக்கும் ,பிரயாணங்களில் நல்ல பலன் கிடைக்கும் ,வழக்குகளில் ஒரு நல்ல முடிவு ஏற்படும் ,மனைவி மக்கள் மகிழ்ச்சி ஏற்படும் வண்ணம் நடந்து கொள்வார்கள் ,மன மகிழ்ச்சிக்கான நிகழ்ச்சிகள் கிட்டும் ,மொத்தத்தில் இந்த வரம் உற்சாகமான வாரமாக அமையும் 

( கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள் )

வேடிக்கையாக பேசும் ரிஷபம் ராசி அன்பர்களே ,இந்த வாரம் உங்களுக்கு பல நன்மைகள் ஏற்படும் ,புகழ் ,கெளரவம் ,மனமகிழ்ச்சி ஏற்படும் ,வாரத்தின் முதலில் பண விரயம் ஏற்படும் ,போட்டி பந்தயங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது ,உறவினர்களும் நண்பர்களும் உறுதுணையாக இருப்பார்கள்

கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை ஏற்படும் ,தாயார் உடல் நிலையில் கவனம் தேவை ,தொழிலில் முன்னேற்றமான சூழ்நிலை ஏற்படும் எதிரிகள் தொல்லை அகலும் ,கணவன் மனைவியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும் .

(மிருகசிரீடம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)

நல்ல எண்ணங்களும் நோக்கங்களும் கொண்ட மிதுன ராசி அன்பர்களுக்கு இந்த வாரம் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும் ,கணவன் மனைவியிடையே உறவு மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும் ,நண்பர்கள் உறவினர்கள் வருகை  மன மகிழ்ச்சியை தரும் ,குடும்பத்தினர் உங்கள் மீது அக்கறை காட்டுவார்கள்

பொருளாதாரம்,முன்னேற்றம் சிறப்பாக இருந்தாலும் சுப விரயங்களை கொடுக்கும் ,கண் சம்பந்தப்பட்ட நோய் ஏற்படும் ,இளைய சகோதரன் இடையே ஏற்பட்ட மனஸ்தாபம் விலகும் ,வாரத்தின் பின் நாளில் மனக்கவலையும் பொருள் நஷ்டமும் ஏற்படும்  .

(புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)

பேச்சில் சாமர்த்தியம் கொண்ட கடக ராசி அன்பர்களுக்கு இந்த வாரம் மனைவி மக்களால் மகிழ்ச்சி ஏற்படும் ,உயர் பதவியில் இருப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் ,வம்பு வழக்குகள் திருப்திகரமாக இருக்காது ,பண விரயம் ஏற்படும்

வாரத்தின் பின் நாள் மகிழ்ச்சி ஏற்படும் ,பொருளாதார முன்னேற்றம் ஏற்படும் ,விவசாயம் ,கால்நடை போன்றவற்றில் ஆதாயம் ஏற்படும் சகோதரர்  மூலமே சந்தோஷம் ஏற்படும் தாயாருக்கு உடல் ஆரோக்கியதில் கவனம் தேவை பேச்சில் கவனம் தேவை


( மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)

தைரியமும் வாக்குவன்மையும் கொண்ட சிம்ம ராசி அன்பர்களுக்கு இந்த வாரம் நன்மையான வாரமாக இருந்தாலும் வீண் அலைச்சல் ஏற்படும் செய்தொழிலில் அதிக நன்மை ஏற்படும் வாழ்க்கையில் ஒரு திருப்பம் உண்டாகும் மேலதிகாரிகள் ஆதரவு காட்டுவார்கள் பதவி உயர்வு கிட்டும்

கணவன் மனைவி உறவுகள் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும் வண்டி வாகன யோகம் ஏற்படும் தாயார் உடல் ஆரோக்கியம் பெறும் சகோதர வழியில் நன்மை ஏற்படும் போட்டி பந்தயங்களில் வெற்றி வாகை சூடுவீர்கள்
( உத்திரம் – 2, 3, 4-பாதங்கள், ஹஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்)

நீதி நேர்மை பண்புகளை  கொண்ட கன்னி ராசி அன்பர்களுக்கு இந்த வாரம் பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும் மனைவி மக்களால் மகிழ்ச்சி ஏற்படும் பொருளாதாரா  நிலை திருப்திகரமாக இருக்கும் நண்பர்கள் உதவி புரிவார்கள்

மேலதிகாரிகள் ஆதரவு கிடைக்கும் வெளியூர் பயணம் மூலம் பலன் கிடைக்கும் கண் சம்பந்தப்பட்ட நோய் ஏற்பட வாய்ப்புள்ளது பதவி உயர்வு ஏற்படும் ஆன்மீக சிந்தனையும் தர்ம சிந்தனையும் ஏற்படும் உடல் ஆரோக்கியம் ஏற்படும் குடும்பத்தில் சுப நிகழ்ச்சி ஏற்படும் 

( சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)

ஆணித்தனமான பேச்சை கொண்ட துலாம் ராசி அன்பர்களுக்கு இந்த வரம் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகவேண்டிய நிலை ஏற்படும் வேலையில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் இல்லை என்றால் கெட்ட பெயர் அவமானங்கள் ஏற்படும்

பயணங்களால் ஆதாயம் ஏற்படும் நண்பர்களால் எதிர்பாராத உதவி கிடைக்கும் எதிரிகளால் தொல்லை ஏற்படும் கணவன் னைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கம் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும் மாணவர்களுக்கு சாதகமான வாரம்

( விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )

சுறு சுறுப்பும் ஊக்கமும் கொண்ட விருச்சிக அன்பர்களுக்கு இந்த வாரம் புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது புதிய ஒப்பந்தம் செய்வதை தவிர்க்கவும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை எதிரிகளால் தீமை ஏற்படும் வியாபாரிகள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் புதிய முதலீடுகளை தவிர்க்க வேண்டும்

வாரத்தின் பின் நாள் எதிர்பாராத உதவி நண்பர்களால் ஆதாயம் உறவினர்கள் சேர்க்கை மனமகிழ்ச்சி பொருளாதார மேன்மை அதிகாரிகளின் ஆதரவு கொடுப்பதில் சந்தோஷம் நிலவும் கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கம்

( மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திராடம் –1 பாதம்)

நல்லொழுக்கம்   கொண்ட தனுசு ராசி அன்பர்களுக்கு இந்த  வாரம் பொருள் சேர்க்கை ஏற்படும் அனைவருடைய நன்மதிப்பையும் பெறலாம் பெரியோர்களின் பாராட்டு போட்டி பந்தயங்களில் வெற்றி கிட்டும் வழக்குகள் நல்ல முடிவுக்கு வரும் சிறு சிறு தடைகள் மனதுக்கு சங்கடங்கள் ஏற்பட்டாலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்

மகிழ்ச்சிகரமான வாரமாக அமையும் பந்துக்கள் வருகை மனதுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தும் வெளியூர் பயணம் மூலம் ஆதாயம் ஏற்படும் புதிய முதலீடு லாபம் ஏற்படும் கணவன் மனைவியிடையே ஏற்படும் கருத்து வேறுபாடு மாறும் ஒற்றுமை மேலோங்கும் தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை

( உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் )

ஆன்மீக சிந்தனையும் காலை நயம் கொண்ட மகர ராசி அன்பர்களுக்கு சிறு சிறு தொல்லைகள் ஏற்பட்டாலும் பொருளாதாரத்தில் முன்னேற்றமும் மன மகிழ்ச்சியும் ஏற்படும் புதிய நண்பர்கள் சேர்க்கை ஏற்படும் ஆடல் பாடல்களில் சந்தோஷமான போக்கை ஏற்படுத்தும்

பிரியமான உணவு புசிப்பதில் மனம் ஈடுபடும் பிராணன்களில் நல்ல பலன் ஏற்படும் வழக்குகளில் நல்ல முடிவு ஏற்படும் மாணவி மக்களிடையே சண்டை சச்சரவு ஏற்படும் உடல் நலம் பாதிக்கும் அதிகாரிகளிடம் எச்சரிகையுடன் இருப்பது நல்லது

( அவிட்டம் – 3,4 பாதங்கள்– சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)

நற்பண்புகளை கொண்ட கும்ப ராசி அன்பர்களுக்கு இந்த வாரம் மனக்கவலையுடன் காண்பீர்கள் எதிரிகள் உங்களைவிட்டு விலகி செல்வார்கள் மனக்கவலை நீங்கும் ஆன்மீக சிந்தனையில் ஆர்வம் காட்டுங்கள் பேச்சில் கவனம் தேவை உங்கள் பேச்சே உங்களுக்கு சத்ரு

உடல் நலத்தில் கவனம் தேவை பொருளாதார முன்னேற்றம் ஏற்படும் சகோதர உறவுகளில் இருந்த விரிசல் அகலும் மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும் கணவன் மனைவியிடையே ஒற்றுமை மேலோங்கும்


( பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)

உழைப்பால் உயரும் மீன ராசி அன்பர்களுக்கு இந்த வாரம் உங்களுக்கு சமுதாயத்தில் பேரும் புகழும் ஏற்படும் உங்கள் எதிரிகள் உங்களை  விட்டு விலகி செல்வார்கள் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்படும் திருமண மாகா தவர்களுக்கு              திருமண முயற்சிகள் கைகூடும் கல்வியில் மேன்மை அடைவீர்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி வீடு மனை யோகம் ஏற்படும் பணவரவு திருப்திகரமாக இருக்கும் பெரியோர்களின் பாராட்டு நன்மதிப்பும் உண்டாகும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *