வார ராசிபலன் 24-02-2019 முதல் 02-03-2019 வரை

ஜோதிட சிகாமணி
N.கிருஷ்ணமூர்த்தி MA
தமிழ் நேரலை

மேஷம்

அசுவதி, பரணி, கார்த்திகை 1ம் பாதம் வரை

கலை நயமும், வெளிப்படையாக பேசும் தன்மையும் கொண்ட மேஷம் ராசி வாசகர்களே! வரும் வாரத்தில் உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். உறவினர்களுக்கு இடையே உங்கள் செல்வாக்கு உயரும். நீங்கள் எதிர்பார்த்தபடி பொருளாதார வளர்ச்சி மேம்படும்.

 

ரிஷபம்

கார்த்திகை 2,3,4 பாதங்கள், ரோகிணி, மிருகசீரிஷம் 1,2 பாதம் வரை

பாசமும், சிந்தித்து செயலாற்றும் தன்மையும் கொண்ட ரிஷப ராசி வாசகர்களே! உறவினர்களின் ஆதரவு மற்றும் உதவிகள் கிட்டும். நீண்டநாட்களாக இருந்து வந்த நோய் அல்லது உடல் பிரச்சனைகள் தீரும். புதிய செலவுகள் வந்து சேரலாம். கவனமுடன் செயல்பட்டால் நன்மைகள் கிடைக்கும் வாரம் இது.

 

மிதுனம்

மிருகசீரிஷம் 3,4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 பாதங்கள் வரை

சூழ்நிலைக்கு ஏற்றவாறு செயல்படும் சமயோசித புத்தி கொண்ட மிதுன ராசி வாசகர்களே! நீங்கள் கவனமுடன் செயல் பட வேண்டிய வாரம் இது. புதிய தொழில் முதலீடுகள் வேண்டாம். உடல் நிலையில் அக்கரை செலுத்த வேண்டியது அவசியம். கொடுக்கல், வாங்கள் பண பரிமாற்றம் இந்த வாரத்தில் வேண்டாம்.

 

கடகம்

புனர்பூசம் 4-ம் பாதம், பூசம், ஆயில்யம் வரை

பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் வல்லவர்களான கடக ராசி வாசகர்களே! நீங்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த காரியங்கள் வெற்றி பெறும். எந்த செயல் செய்தாலும் அதில் திருப்தி ஏற்படும். மொத்தத்தில் வெற்றிகள் குவியும் வாரம் இது.

 

சிம்மம்

மகம். பூரம், உத்ரம் 1-ம் பாதம்வரை

வெற்றியை விரும்பும், துணிச்சல் மிகுந்த சிம்ம ராசி வாசகர்களே! உறவினர்கள் இடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை உயரும் வாரம் இது. எடுத்த காரியங்கள் வெற்றி பெறுவதில் தாமதம் ஏற்படும். முக்கிய காரியங்களை 3 மாதங்களுக்கு தள்ளி போடுதல் நல்லது.

 

கன்னி

உத்ரம் 2,3,4 பாதங்கள், ஹஸ்தம், சித்திரை 1,2 பாதங்கள் வரை

எடுத்த காரியங்களில் மன உறுதியுடன் செயல்படும் கன்னி ராசி வாசகர்களே! பிறருடன் ஏற்படும் வாக்கு வாதங்களை தவிர்த்தல் நல்லது. இந்த வாரத்தில் பொறுமையை கடைபிடித்தல் அவசியம். வீடு மற்றும் நிலம் வாங்கும் விவகாரங்களில் தாமதம் ஏற்படும்.

 

துலாம்

சித்திரை 3,4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3 பாதங்கள் வரை

உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் விரும்பும் துலாம் ராசி வாசகர்களே! பொருள், பண வரவுகள் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் திருப்தி காணப்படும். செய்யும் காரியங்களில் எதிர்பார்த்த வெற்றிகள் கிடைக்கும். மொத்தத்தில் லாபம் பொழியும் வாரம் இது.

 

விருச்சிகம்

விசாகம் 4-ம் பாதம், அனுசம், கேட்டை வரை

சொல்லிலும், செயலிலும் வல்லவர்களான விருச்சிக ராசிவாசகர்களே! இந்த வாரத்தில் தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்படும். வீடு இடமாற்றம் ஏற்படலாம். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். மன உலைச்சல் மற்றும் எதிர்பாரா செலவுகள் ஏற்படும்.

 

தனுசு

மூலம், பூராடம், உத்ராடம், 1-ம் பாதம்வரை

எப்போதும் சுறுசுறுப்புடன் காணப்படும் தனுசு ராசிவாசகர்களே! சிந்தித்து நிதானமாக செயல்பட வேண்டிய வாரம் இது. உடல்நிலையில் அக்கறை தேவை. தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படலாம். எந்த செயலாக இருந்தாலும் சிந்தித்து கவனமுடன் செயலாற்றுவது நலம்.

 

மகரம்

உத்ராடம் 2,3,4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2 பாதங்கள் வரை

பொறுமையுடன், எதையும் ஆராய்ந்து செயலாற்றும் மகர ராசி வாசகர்களே! இந்த வாரத்தில் வரவுக்கு ஏற்ற செலவுகள் ஏற்படும். வீண் செலவுகளை தவிர்த்தல் நலம். உடல்நலம் மற்றும் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவீர். எந்த காரியத்திலும் சற்று பொறுமையை கடைபிடித்தால் நன்மை கிட்டும்.

 

கும்பம்

அவிட்டம் 3,4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1,2,3 பாதங்கள் வரை

லட்சயத்துடன் கூடிய முயற்சியை உடைய கும்ப ராசி வாசகர்களே! செய்யும் தொழிலில் கவனமுடன் செயல்பட வேண்டிய வாரம் இது. வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கல்கள் ஏற்படும். பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேரும். உறவினர்கள் மத்தியில் உங்கள் மதிப்பு மரியாதை குறையலாம்.

 

மீனம்

பூராடம் 4-ம் பாதம் வரை, உத்ரட்டாதி, ரேவதி வரை

பிறர்க்கு மதிப்பும், மரியாதையும் அளிக்கும் நல்ல குணம் படைத்த மீன ராசி வாசகர்களே! எதிர்பார்த்த காரியங்களில் வெற்றிகள் கிடைக்கும். திருமண பேச்சு வார்த்தைகள் ஏற்படும். வெளிநாட்டு பயணங்கள் செல்லும் வாய்ப்புகள் ஏற்படலாம். பண புழக்கம் அதிகரிக்கும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பண பாக்கிகள் வந்து சேரும். மொத்தத்தில் திருப்திகரமான வாரமாக அமையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *