வார ராசிபலன் 07/04/2019 முதல் 13/04/2019 வரை

கணித்தவர்
ஜோதிட சிகாமணி
திருமதி K.ராஜேஸ்வரி MA

மேஷம்
(அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்)

இந்த வாரத்தின் முற்பகுதியில் உயர்ந்த நிலையை அடைய உள்ளீர்கள். வாரத்தின் பிற்பகுதியில் நஷ்டைத்தை அடைய வாய்ப்பு உள்ளது. உடல் நிலையில் சற்று கவனம் தேவை. உறவுகளின் அன்பு தொல்லை அதிகரிக்கும். ஆனால் எந்த லாபத்தையும் எதிர்பார்க்க முடியாது. கணவன் மனைவிக்கு இடையே உறவு நிலை சிறப்பாக இருக்கும்.மாணவர்களின் கல்வி நிலை உயரும்.குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பால் குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். பொருட்கள் சேர்க்கை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இன்னும் 12 நாட்கள் கழித்து உங்கள் காட்டில் மழைதான்,அதுவரை பொறுமையாக இருக்கவும்.

ரிஷபம்
( கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள் )

மிகவும் சிறப்பான வாரமாக அமையும்.பொழுபொக்கு அம்சங்களில் அதிக ஈடுபாடு ஏற்படும். மன அமைதியும், புதிய பொறுப்புகளும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.மாணவர்களுக்கு கல்வியின் மேல் ஈடுபாடு அதிகரிக்கும்.குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். கணவன் மனைவிக்கு இடையே  இருந்த பிரச்சனைகள்  அகலும். செவாய் மற்றும் குருவின் இடமாற்றத்தின் காரணமாக பல மாறுதல்கள் ஏற்பட உள்ளது. பண பரிமாற்றத்தில் கவனம் தேவை. நீண்ட நாட்களாக உள்மனதில் ஏற்பட்ட கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் வாரமிது.மொத்தத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வாரம்.

மிதுனம்
(மிருகசிரீடம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)

இந்த வாரத்தில் தொழில் வியாபாரத்தில் அதிக லாபத்தை எதிர்பார்க்கலாம். பண வரவுக்கு குறைவு இருக்காது. சற்று கவனமுடன் செயல் பட்டால் பெரிய வெற்றிகளை குவிக்கலாம்.குடும்பத்தால் சந்தோஷம் உண்டாகும். வெப்பத்தின் பாதிப்பால் உடல்நிலையில் சோர்வு ஏற்படும். எரிச்சல், கோபம் போன்றவற்றை அடக்கி கையாண்டால் இந்த வாரம் அருமையாக இருக்கும்.பணவரவுக்கு குறை இருக்காது. மனதில் நிம்மதி கிடைக்கும். மொத்தத்தில் அருமையான வாரம் இது.

கடகம்
(புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)

நீண்ட நாட்களாக பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு வந்த கடக ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் அனைத்து பொருளாதார கஷ்டங்களும் நீங்க போகிறது. இதனால் உங்கள் உள்மனம் புத்துணர்வு பெறும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன் மனைவி உறவுமுறை திருப்திகரமாக இருக்கும். கல்வியில் சிறப்பான நிலையை அடைவீர். வெற்றிகள் உங்களை தேடி வரும். உங்களின் நீண்ட நாளைய தோல்விகள் வெற்றிகளாக மாறும் வாரம் இது. சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும். காதலில் சற்று நிதானத்தை கடைபிடித்தால் பிரச்சனைகளை தவிர்க்கலாம். தொழில் வளர்ச்சி உன்னத நிலையை அடையும் வாரம் இது.

சிம்மம்
( மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)

சற்று கவனமுடன் செயல்பட வேண்டிய வாரமிது. அனைத்து கிரக நிலைகளும் சற்று மாறி இருப்பதால் எதிலும் சாதாரண பலன்களை மட்டுமே எதிர்பார்க்க முடியும். பேச்சை குறைத்தால் பிரச்சனைகள் குறையும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும்.மாணவர்கள் கல்வியில் சற்று கவனமுடன் செயல்பட வேண்டும். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். மொத்தத்தில் மன உறுதியுடன் செயல் பட வேண்டிய வாரம் இது.

கன்னி
( உத்திரம் – 2, 3, 4-பாதங்கள், ஹஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்)

7,8 ஆம் தேதிகளில் சந்திராஷ்டமம் உள்ளதால் சற்று நிதானத்துடன் செயல்பட வேண்டும். மன உறுதியை குலைக்கும் சம்பவங்கள் நடைபெற்றாலும் மன உறுதியை விட்டு விடாதீர்கள். கணவன் மனைவி இடையே உறவுமுறை சிறப்பாக இருக்கும். ஆனால் இருவர் உடல் நிலையிலும் கவனம் செலுத்துவது நல்லது. அலுவலக பதவி உயர்வை எதிர்பார்க்கலாம். உணவு விஷயங்களில் கவனம் தேவை. கல்வியில் சிறப்பான முன்னேற்றம் காணப்படும். உறவுகளால் சில அன்பு தொல்லைகள் ஏற்படும். தொழிலில் உச்ச நிலையை அடைவீர்கள்.

துலாம்
( சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)

இந்த வாரம் 8 ,9,10 ஆம் தேதிகளில் சந்திராஷ்டமம் உள்ளதால் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. இந்த வாரம் நடுபகுதியில் இருந்து உங்கள் வாழ்வில் பல மாற்றங்கள் ஏற்படும். அதுவரை பொறுமையாக இருங்கள். அதன் பிறகு வெற்றிகள் தான். கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனைகள் ஏற்படலாம். உறவினர்கள் உங்கள் திறமை மற்றும் குணத்தை பாராட்டுவார்கள். உங்கள் உடல் நிலையில் கவனம் செலுத்துங்கள். உணவு கட்டுப்பாடு அவசியம். வேலை செய்யும் இடத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவு இருக்காது. கல்வியில் கவனம் செலுத்துவீர்கள். நீண்ட நாளைய கனவு நபரை சந்திப்பீர்கள். வாரத்தின் பின் பகுதி சிறப்பாக அமையும்.

விருச்சிகம்
( விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )

உங்களின் பொற்கால வாரம் இது என்று கூறலாம். மனதில் ஏற்படும் பயத்தை அகற்றினால் வெற்றி உங்கள் வசமே. உங்களின் நீண்ட கால பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். ஆதலால் மன மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி நிலவும்.குடும்பத்தில் புதிய உறுப்பினர்கள் வர வாய்ப்பு உள்ளது. 10 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமுடன் செயல்படவும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன் மனைவி இடையே பரிசு பொருட்கள் பரிமாறி கொள்ள வாய்ப்பு உள்ளது. அந்நிய தேசத்து உறவுகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

தனுசு
( மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திராடம் –1 பாதம்)

அற்புதமான வாரம் இது. நீண்ட நாளைய குழப்பங்கள் தீரும். குடும்ப உறவுகளின் ஒத்துழைப்பால் உங்கள் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். சுக்கிரன் மூன்றாம் இடத்தில் உள்ளதால் சற்று அமைதி கடைபிடிக்கவும். எதிலும் விட்டு கொடுத்து செல்வதால் வெற்றியை அள்ளலாம். கணவன் மனைவி இடையே உறவு நன்றாக இருக்கும். ஆனால் செலவினங்கள் கட்டுப்பாட்டில் இருக்காது. அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாதீர்கள். கல்வியில் அதிக மதிப்பெண்கள் பெற வாய்ப்பு உள்ளது. புதன் மற்றும் சந்திரனின் பார்வையால் உச்சத்தை  அடையும் வாரம் இது.

மகரம்

( உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் )

உங்கள் வாழ்வில் உச்சகட்ட வெற்றியை குவிக்கும் வாரம் இது. நீண்ட கால தடைகள் அகலும். மிக வேகமான மாற்றங்களை எதிர்பார்க்கலாம். உங்கள் எதிரிகள் உங்களை கண்டு அஞ்சி நடுங்குவார்கள். கணவன் மனைவியிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்களது மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.செலவினங்கள் குறையும். மொத்தத்தில் வெற்றி மட்டுமே இந்த வாரத்தில் கிடைக்கும். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும். சிறப்பான பலன்களால் உள்மனது பூரிப்பு அடைவீர்கள்.

கும்பம்
( அவிட்டம் – 3,4 பாதங்கள்– சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)

இந்த வாரம் சிறப்பான பலன்களை அடைவீர்கள். நீண்ட கால பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். இந்த வார முற்பகுதியில் சிறப்பான பலன்களையும், பிற்பகுதியில் சுமாரான பலன்களையும் எதிர்பார்க்கலாம். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். புதிய சொத்துக்கள் வாங்க வாய்ப்பு உள்ளது. சேமிப்பு உயரும். குடும்ப உறவுகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். கல்வியில் தேர்ச்சி அடைவீர்கள். உடல் நலம் சிறப்பாக இருக்கும். தொழில் வளர்ச்சியில் உச்ச நிலையை அடைவீர்கள். அரசியல் வாதிகளுக்கு சமுதாயத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். சேமிப்பு அதிகரிக்கும் வாரம் இது.

மீனம்
( பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)

இந்த வாரம் நல்ல சிறப்பான வாரமாக அமைய உள்ளது. புதன் இட மாற்றத்தினால் சிறப்பான பலன்களை அடைய வாய்ப்பு உள்ளது. உடல் நிலையில் கவனம் தேவை. உறவினர்கள் இடத்தில் சற்று கவனத்தை கடைபிடிக்கவும்.அலுவல வேளைகளில் கவனமுடன் செயல்படவும். கல்வியில் உயர்ந்த நிலையை அடையலாம். தொழில் போட்டிகளில் எச்சரிக்கை உடன் செயல்பட்டால் வெற்றிகளை குவிக்கலாம். உணவு விஷயங்களில் கட்டுப்பாட்டை கடைபிடிக்கவும்.எச்சரிக்கை உடன் செயல்பட்டால் வெற்றிகள் கிடைக்கும் வாரம் இது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *