வார ராசிபலன் 03/05/2019 முதல் 09/05/2019 வரை

கணித்தவர்
ஜோதிட ஆசிரியர்
J. முனிகிருஷ்ணன். M.E,D.Astro.,

மேஷம்

(அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்)


பொதுவாக இந்த வாரம் மன நிம்மதி குறைவாகவும், அலைச்சல் அதிகமாகவும் இருக்கும். எதிரிகளின் தொல்லை அதிகரித்து பணியாளர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்படும். எடுத்த காரியங்கள் தடைகள் ஏற்பட்டு தாமதமாகும். உறவுகளால் தனம் நஷ்டம் ஏற்படும்.குடும்பத்தில் சந்தோஷம் நிலவும், தாயார் மூலம் ஆதாயம் ஏற்படும். கணவன் மனைவி இடையே அன்யோன்யம், சந்தோஷம், போஜனம் போன்றவை சிறப்பாக இருக்கும். காதல் கைகூடும். தொழில் முன்னேற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

ரிஷபம்

( கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள் )

பொதுவாக இந்த வாரம் பொருளாதார நெருக்கடி ஏற்படும். புத்திரர்களால் மன கசப்பான அனுபவம் ஏற்படும். தாய் தந்தை கருத்து வேறுபாடு அகலும்.குடும்பத்தில் கணவன் மனைவி விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. மூத்த சகோதரின் மூலம் ஆதாயம் கிட்டும். உடல் ஆரோக்கியம் மேம்படும். கூட்டு தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள். பேச்சில் கவனம் தேவை. இல்லையெனில் வம்பு வழக்குகள் சந்திக்க நேரிடும்.

மிதுனம்

(மிருகசிரீடம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)


பொதுவாக இந்த வாரம் உங்களுக்கு சிறப்பான வாரமாக அமையும். நீங்கள் எதிர்பார்த்த காரியங்களில் வெற்றி கிட்டும். உங்கள் எண்ணங்கள் நிறைவேறும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். கல்வியில் சிறப்படைவீர்கள். கல்வியில் எதிர்பார்த்த விஷயங்கள் தடை இன்றி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியம் பெறும்.குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். சகோதர வழியில் ஆதாயம் ஏற்படும். காதல் வசபடுவீர்கள். வண்டி,வாகனங்களில் செல்லும் போது கவனமாக செல்லவும். விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படும்.

கடகம்
(புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)

பொதுவாக இந்த வாரம் உங்களுக்கு எல்லா நிலையிலும் சிறப்பானதாக அமைய போகிறது. உங்கள் எதிரிகள் விலகி செல்வார்கள். சகோதர வழியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மாறி ஒற்றுமை மேலோங்கும். சகோதர வழியில் ஆதாயம் உண்டு. தொழில் ரீதியாக எடுத்த முயற்சிகள் வெற்றி அடையும். தனம் லாபம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக தடைபட்டு இருந்த திருமண முயற்சிகள் கைகூடும். சுப செலவுகள் ஏற்படும் வாரம் இது. கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும், அன்யோன்யம் குறையாது.

சிம்மம்
( மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)

பொதுவாக இந்த வாரம் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். உங்களின் சேமிப்பு கணக்கு உயரும்.குடும்பத்தில் சந்தோஷம் நிலவும் வாரம் இது. மூத்த சகோதரரிடம் ஏற்பட்ட மன விரிசல்கள் அகலும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பணி செய்யும் இடங்களில் விட்டுக்கொடுத்து செல்வது நன்மை பயக்கும். உங்களின் அந்தஸ்து உயரும். தந்தையிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு அகலும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உணவு கட்டுப்பாடு அவசியம்.

கன்னி
( உத்திரம் – 2, 3, 4-பாதங்கள், ஹஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்)

பொதுவாக இந்த வாரத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் தடைபடும். எதிரியின் தொல்லைகள் அதிகரிக்கும். மேற்கொள்ளும் பணிகளில் சிக்கல்கள் ஏற்படும். பேசும் போது கவனம் தேவை, இல்லையெனில் வம்பு, வழக்குகள் சந்திக்க நேரிடும். வெளிவட்டார நண்பர்களால் சிறப்பில்லை.குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். இந்த வாரத்தில் எச்சரிக்கை உடன் செயல்படுவது அவசியம். தேவையில்லாத விரயச் செலவுகள் ஏற்படும்.உறவினர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்படும்.

துலாம்
( சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)

இந்த வாரம் நீங்கள் மனதால் ஏற்பட்ட குழப்பங்கள் ,அவமானங்கள், எதிரிகள் போன்றவற்றில் இருந்து விடுபடுவீர்கள். இந்த வாரத்தில் நீங்கள் விபரீத ராஜ யோகத்தை சந்திக்க உள்ளீர்கள். இதுநாள் வரை ஏற்பட்ட வம்பு, வழக்குகள் போன்றவற்றில் இருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். இளைய சகோதர சகோதரியின் மூலம் ஆதாயம் அடைவீர். திருமணம் ஆகாதவர்களுக்கு விவாகம் கூடி வரும். உங்கள் வாழ்க்கை நிலை உயரும். பெரிய மாற்றங்கள் சந்திக்க போகும் வாரம் இது.

விருச்சிகம்
( விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )

பொதுவாக இந்த வாரம் உங்களுக்கு தனலாபம் ஏற்படும். உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். எடுத்த முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். கவன குறைவு, மறதி ஏற்படும். தொழில் முன்னேற்றம் அடைவீர்கள்.பணியாளர்கள் ஒத்துழைப்பு ஏற்படும்.குடும்பத்தில் சந்தோஷம் காணப்படும். பிள்ளைகளின் மூலம் சந்தோஷம் ஏற்படும். எதிரிகளின் தொல்லைகளில் இருந்து விடுபடுவீர்கள். இளைய சகோதரர் மூலம் ஆதாயம் உண்டு. கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அகலும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. போட்டி பந்தயங்களில் வெற்றி பெறுவீர்கள்.

தனுசு
( மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திராடம் –1 பாதம்)

பொதுவாக இந்த வாரம் உங்களுக்கு முன்னேற்றத்தை தரும் வாரமாக அமைய போகிறது. தொழில் ரீதியாக எடுத்த முயற்சிகள் கைகூடும்.குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.புத்திரர்கலால் மேன்மை கிடைக்கும். வரவுக்கு மீறிய செலவு ஏற்படும். தாயாரிடம் இருந்த கருத்து வேறுபாடு மாறும்.குடும்பத்தினரிடம் அனுசரித்து செல்வது நன்மை பயக்கும்.சகோதரர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். மன குழப்பத்தில் இருந்து விடுபடுவீர்கள்.

மகரம்

( உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் )

பொதுவாக இந்த வாரம் உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவு ஏற்படும். வருமானம் அதிகரிக்கும். தொழிலில் மேன்மை அடைவீர்கள். பெற்றோர்கள் உங்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பார்கள்.குடும்பத்தினர் உங்கள் மீது பற்று அக்கறை செலுத்துவார்கள். நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை மேலோங்கும். காதல் விவகாரங்கள் மன வேதனையை ஏற்படுத்தும்.

கும்பம்
( அவிட்டம் – 3,4 பாதங்கள்– சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)

இந்த வாரம்  உங்களின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். இது நாள் வரை உங்கள் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டு இருந்த தடைகள் அகலும். இனி கவலை வேண்டாம். உங்களின் வருமான நிலை மிக சிறப்பாக இருக்கும்.குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். உடல் ஆரோக்கியம் சீர் அடையும். தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள். கணவன் மனைவி விட்டு கொடுத்து செல்வது நல்லது.குழந்தைகளின் மூலம் குடும்பத்தில் சந்தோஷம் நிலவும்.

மீனம்
( பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)

உங்கள் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும் வாரம் இது. உங்களின் பேச்சு மூலம் ஆதாயம் அடைவீர்கள். தொழிலில் வெற்றிகள் பெரும் நேரம் இது. களத்திர வழியில் ஆதாயம், வருமானம் ஏற்படும். தாயாரிடம் கருத்து வேறுபாடு ஏற்படும். வரவுக்கு மீறிய செலவு காணப்படும். சுப விரயம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மருத்துவ செலவுகள் ஏற்படும். சகோதர வழியில் ஆதரவு கிடைக்கும். புதிய தொழில் தொடங்க புதிய திட்டங்கள் வகுப்பிர்கள். காதல் திருமணம் கைகூடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *