சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதிய ஆட்டமானது டெல்லி பெரோஸ் ஷா கொட்லா மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 147 ரன்கள் எடுத்தது. டெல்லி அணி தரப்பில் தாவன் அதிகபட்சமாக 47 பந்துகளில் 51 ரன்கள் அடித்தார். சிறப்பாக பந்து வீசிய பிராவோ 33 ரன்கள் விட்டு கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்களை கைப்பற்றினார்.
148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி தொடக்கத்தில் அடித்து ஆடியது. ஷேன் வாட்சன் 26 பந்துகளில் 44 ரன்கள் அடித்து மிஸ்ரா பந்து வீச்சில் ஸ்டம்பிங் செய்யபட்டு வெளியேற்றபட்டார். அதன் பின் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி ஓவரில் 150 ரன்கள் அடித்து 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த தொடரில் பெரும் இரண்டாவது வெற்றி இதுவாகும். ஆட்டநாயகன் விருதை ஷேன் வாட்சன் பெற்றார்.