ரஷ்யாவுக்கும்¸ அமெரிக்காவுக்கும் இடையிலான நல்லுறவு உக்ரைன் விவாகரத்தில் மோதலாக மாறிவுள்ளது. சோவியத் யூனியனாக இருந்தபொழுது அதன் ஒரு மாநிலமாக இருந்த உக்ரைன் பிரிந்து சென்று தனி நாடானது. இப்பொழுது தனி நாடாக உருவெடுத்து செயல்பட்டு வருகிறது. ரஷ்யா தனது படைபலத்தை அதன் எல்லையோரம் குவித்து வருகிறது. இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.
இது சம்பந்தமாக ரஷ்யா அதிபரும்¸ அமெரிக்கா அதிபரும் போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். ஆனால்¸ இது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் தொடுக்கும் என உலகளவில் பேசப்பட்டு வருகிறது. இது குறித்து பேச சுவிட்சர்லாந்தில் ரஷ்யா, அமெரிக்க அதிகாரிகள் இடையே பேச்சு வார்த்தை நடக்க உள்ளது. இது குறித்து பேச சுவிட்சர்லாந்தில் ரஷ்யா, அமெரிக்க அதிகாரிகள் இடையே பேச்சு வார்த்தை நடக்க உள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்கா தங்கள் முடிவில் எந்த மாற்றமும் இல்லை. ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்தால் கடும் பொருளாதார தடையை எதிர்கொள்ள நேரிடும் என அமெரிக்கா ரஷ்யாவை எச்சரித்துள்ளது.