தெலுங்கில் மெகா ஹிட் ஆன அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தை தமிழில் பாலா ரீமேக் செய்தார். இந்த படத்தில் பாலா மாற்றி அமைத்த காட்சிகள் சுவாரசியமாக இல்லை எனவும், படத்தை மீண்டும் எடுக்க போவதாகவும் பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. இந்நிலையில் படத்தின் நாயகியாக நடித்த மேகா சவுத்ரிக்கு பதிலாக நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.படத்தின் நாயகனாக நடிகர் விக்ரமின் மகன் துருவ் நடிப்பது குறிப்பிடதக்கது.
வர்மா படத்தில் நாயகியும் மாற்றமா?
