இந்தியாதமிழ்நாடுபுதிய செய்திகள்

வரும் 22 தேதி திமுக ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கக்கோரி, வரும் 22ஆம் தேதி முதல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக அறிவித்துள்ளது.
தமிழக அரசின் அலட்சியமும் மற்றும் நிர்வாக திறன்குறைவே தண்ணீர் தட்டுபாட்டிற்கு காரணம் என திமுக குற்றசாட்டியுள்ளது.

இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், குடிநீர் பிரச்னைத் தீர்க்க எடுத்த நடவடிக்கை என்ன, நீர் வற்றி வருகிறது என்று கடந்த ஆண்டே தெரிந்திருந்தும் அது குறித்து அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிமுக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதற்கு பிறகும், தண்ணீருக்காக காலிக் குடங்களுடன் அலையும் தாய்மார்களையும், ஆங்காங்கே அமைதி வழியில் மறியலில் ஈடுபடும் மக்களையும் கொச்சைப்படுத்திடும் வகையில் அமைச்சர்களும், முதல்வரும் பேட்டியளித்து வருகின்றனர்.

குடிநீர் தட்டுப்பாடு என்பது வதந்தி என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேட்டி கொடுக்கிறார். எங்கோ ஓரிடத்தில் உள்ள குடிநீர் பிரச்னையைப் பெரிதாக்கி ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்க வேண்டாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகிறார்

தண்ணிர் இல்லாமல் பல ஐ டி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தபடி வேலையை செய்ய ஆணையிட்டுள்ளது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker