அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் தன் டிவிட்டர் பதிவில் விவசாயிகளையும் விவசாய நிலங்களையும் பாதிக்கும் என்ற காரணத்தால்தான் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கெயில் திட்டத்திற்காக விவசாய நிலங்களில் குழாய் பதிக்கப்படுவதை எதிர்த்தார்கள்.ஆனால் மூச்சுக்கு முந்நூறு முறை ‘இது அம்மாவின் ஆட்சி’ என்று சொல்லி ஏமாற்றும் இவர்கள், அம்மா எதிர்த்து வந்த திட்டங்களை தொடர்ந்து அதிகாரிகளையும், காவல்துறையினரையும் குவித்து செயல்படுத்துகிறார்கள். இதனை வன்மையாக கண்டிக்கிறேன். உடனடியாக அப்பணிகளை நிறுத்த வேண்டும் என கூறியுள்ளார்.
வன்மையாக கண்டிக்கும் டிடிவி தினகரன் அவர்கள்
