நடுத்தர மக்கள் சாதாரணமாக வங்கிகணக்கை தொடங்கக் கூட ஆயிரம் விதிமுறைகளைப் பிறப்பிக்கும் வங்கிகள். தொழில் அதிர்பர்களை பார்த்த உடன் என்ன நினைக்கிறார்கள் எனக் கடவுளுக்கே வெளிச்சம். சாதாரண மக்களை மன உளச்சளை ஏற்படுத்தும் வங்கிகள் செல்வந்தர்களை மனம்உவந்து உற்சாகப்படுத்தும் நோக்கில் கோடிகோடியாக கொட்டிக் கொடுத்து நாட்டைச் சீரழிக்கிறார்கள். சாதாரண மக்களைக் கண்டால் எஜமானார்கள் போல் நடந்து கொள்ளும் வங்கி அதிகாரிகள். செல்வந்தர்களை கண்டால் தொழிலாளி போல் நடந்து கொள்கிறார்கள். இந்த அவல நிலை இந்தியாவில் மட்டுமே பார்க்க முடியும்.
எந்த விதிமுறைகள் படி அவர்களுக்குக் கடன் வழங்கப்பட்டது. அதன் பிறகு அந்தத் தொழில்கள் என்ன ஆனது, அதன் வளர்ச்சி விகிதம் எவ்வாறு இருந்தது, அந்தத் தொழிலின் மொத்த மதிப்பு என்ன, இப்பொதைய மதிப்பு என்ன, இவ்வளவு நாட்கள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள். சாதாரண நபர்கள் கடன் பெற்றால் மாதமாதம் வந்து பொறுப்புடன் நடந்து கொள்ளும் வங்கி ஊழியர்கள், செல்வந்தர்களின் கடனில் இந்த வழிமுறையைக் கடைப்பிடித்தார்கள் என்றால் எல்லாம் அரோகரா..
பணம் எடுப்பதற்கு இவ்வளவு, குறைந்தபட்சம் கணக்கில் இவ்வளவு, சேமிப்பு வட்டிவீதம் குறைவு, வீட்டுலோன் வட்டி அதிகம், எல்லாவற்றையும் சேர்த்து மொத்தமாகச் செல்வந்தர்களிடம் கொடுத்து ராஜவிசுவாசத்தைக் காட்டுகிறார்களோ என்று தோன்றுகிறது.
நாட்டில் அரசுடைமை வங்கிகளுக்கு இப்பொழுது நேரம் சரியில்லை என்றே தோன்றுகிறது.
ஏனென்றால் தொடர்ந்து மோசடி புகார்கள் தினந்தோறும் வந்த வண்ணம் உள்ளன.
கடந்த ஆறு மாதங்களில் SBI-ல் மட்டும் ரூபாய் 5555 கோடி மோசடி நடந்தது தெரிய வந்து உள்ளது.
எல்லாம் அரோகரா...