வங்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை

வங்க கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் வடமாநிலங்கள் மற்றும் கிழக்கு மாநிலங்கள் 5 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்புள்ளது தென் மாநிலங்களான கர்நாடக கேரளாவில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது

கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக, கடலூர் மாவட்டம் வேப்பூரில், 6 சென்டி மீட்டர் மழையும், நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் தலா 3 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

சென்னையை பொருத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *