லயோலா கல்லூரியின் கேவல செயல்

சென்னை லயோலா கல்லூரியில் மாணவர் அரவணைப்பு மையமும், மாற்று ஊடக மையமும் இணைந்து  கடந்த 19, 20 ஆம் தேதிகளில் வீதி விருது விழா எனும் நிகழ்ச்சியை நடத்தின.

அதில் லயோலா கல்லூரி வளாகத்தில் நடந்த ஓவிய கண்காட்சி பொது மக்கள் முகம் சுளிக்கும் வகையில் அமைந்தது. இந்து மக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக ஓவிய கண்காட்சி அமைந்தது. அதில் இந்துக் கடவுள்கள், திரிசூலம் ஆகியவற்றை தவறாகச் சித்திரிக்கும் விதத்தில் ஓவியங்கள் இடம் பெற்று இருந்தன.

மேலும் மீடூ பாரத மாதா, அகண்ட பாரத கனவு, ஏகபத்திய தாசன், ரபேல் டீல் போன்ற தலைப்புகளின் கீழும் ஓவியங்கள் இருந்தன. மத்திய அரசு, பிரதமர் நரேந்திர மோடி, பாரதிய ஜனதா கட்சி, தாமரை சின்னம் ஆகியவற்றையும் இழிவு படுத்தும் விதமாக ஓவியங்கள் இருந்தன.

சமூக நல் ஒழுக்கம், அமைதி, ஒற்றுமை போன்றவற்றை கற்று தரவேண்டிய பள்ளி கல்லூரிகளே சமுதாயத்தில் கலவரங்கள் ஏற்படுத்தும்  வண்ணம் இது போன்ற செயல்களை ஊக்குவிக்கும் விதமாக நடந்து கொள்வது வேதனைக்குரிய செயலாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *