லண்டன் மேயருக்கு எதிராக டிரம்ப்!

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் மேயராக பாகிஸ்தான் வம்சாவளியான சாதிக் கான் இருந்து வருகிறார். இந்த நிலையில் லண்டன் நகரில் தொடர்ந்து கத்திக்குத்து சம்பவங்கள், வீதி வன்முறைகள் அரங்கேறி வருகின்றன.

இதற்கு சாதிக்கானை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சரமாரியாக சாடி உள்ளார்.
இதையொட்டி அவர் டுவிட்டரில் பதிவிடுகையில், “லண்டனுக்கு புதிய மேயர் வேண்டும். சாதிக்கான் ஒரு அழிவு சக்தி. அவர் நீடித்தால் நிலைமை இன்னும் மோசமாகி விடும். அவர் தேசத்துக்கே அவமதிப்பு. அவர் லண்டன் நகரை அழித்து வருகிறார்” என குறிப்பிட்டு உள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *