இந்தியாவின் முன்னணி நிறுவனமான இன்போசிஸ் இரண்டாவது காலாண்டில் ரூபாய் 4110 கோடி நிகர லாபம் ஈட்டி உள்ளது.இதன் வளர்ச்சி 10.3 சதவீதமாக அதிகரித்துள்ளது. இத்தகவலை அதன் நிர்வாக இயக்குனர் சலீல் பிரேக் தெரிவித்துள்ளார்.செப்டம்பருடன் முடிந்த காலாண்டில் இலக்க முறையில் மட்டும் 90.5 கோடி அமெரிக்க டாலரை ஈட்டியுள்ளது. சிறப்பான வர்த்தகம் மேம்பாட்டின் காரணமாக 200 கோடி அமெரிக்க டாலர்கான புதிய ஆர்டர்களைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
ரூ4110 கோடி லாபம்
