கிரிக்கெட் விமர்சகர்,பொறியாளர் S.வீரசெல்வம்.
தமிழ்நேரலை
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள வெஸ்ட்இண்டிஸ் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் மோத உள்ளது. அதற்கான இந்திய அணியை பிரசாத் தலைமையிலான தேர்வு குழு இன்று ஹைதராபாத்தில் தேர்வு செய்கிறது. அடுத்த வருடம் நடைபெற உள்ள உலக கோப்பையை கருத்தில் கொண்டு அணி தேர்வு செய்யப்படும் என தெரிகிறது. சமீப காலங்களில் ஃபார்ம் அவுட்டில் தவிக்கும் டோனிக்கு வாய்ப்பு அளிப்பது குறித்து விவாதிக்கபடும் என தெரிகிறது. அதே வேளையில் தற்போது சிறந்த பேட்டிங் திறனை வெளிப்படுத்தி வரும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பன்ட்ஐ டோனிக்கு பதிலாக கொண்டு வரவும் ஆலோசிக்கபடலாம். ஒரு பேட்ஸ்மேன் ஆக மட்டும் ரிஷப் பண்ட்ஐ அணியில் கொண்டு வரவும் வாய்ப்பு உள்ளது.