ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும் என்னதான் பிரச்சினை சிறப்புக்கட்டுரை
அரசின் நிதிப்பற்றாக்குறையை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி தனது கையிருப்பு பணத்தில் பெரும்பகுதியை மத்திய அரசுக்குத் தர வேண்டும் என அரசு தரப்பிலிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் இந்தக் கோரிக்கைக்கு ரிசர்வ் வங்கி உடன்படவில்லை. இதைத் தொடர்ந்து மத்திய அரசின் கோரிக்கைக்கு ஆர்பிஐ-யைப் பணியவைக்க ரிசர்வ் வங்கி சட்டத்தில் ஏழாவது பிரிவைப் பயன்படுத்தி வங்கிக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்கும் என்றும் தகவல்கள் வெளியாகின.
மத்திய அரசாங்கத்திற்கும், மத்திய ரிசர்வ் வங்கிக்கும் இடையே ஏற்படும் மோதல் புதிதல்ல முந்தைய ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்த சிதம்பரத்துக்கும், ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த சூப்பராவுக்கும் இடையே நடந்த மோதல் கடந்த காலத்தில் பலரும் பேசும் விஷயமாக அமைந்தது. மத்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னராக இருந்த ரகுராம் ராஜனுக்கும் மத்திய அரசாங்கத்திற்கும் நல்ல உறவு இருந்தது இல்லை. அதேபோல் இப்பொழுதும் மத்திய அரசாங்கத்திற்கும், ஆர்.பி.ஐ-கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த மோதலுக்குப் பல காரணங்கள் உள்ளது.
கடந்த மாதம் மும்பையில் நடந்த “ஏடி ஷெராப்” நினைவு நிகழ்ச்சியில் பேசியவர் ஒரு நாட்டின் மத்திய வங்கியினை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகள் பொருளாதாரத்துக்கு பேரழிவுக்கு வித்திடும் என்று கொஞ்சம் காட்டமாகவே பேசினார். சமீபகாலத்தில் ஆர்.பி.ஐ தரப்பில் மத்திய அரசுக்கு எதிராக இந்த அளவுக்கு யாரும் பேசியதில்லை என்பதால் விராலின் பேச்சு பலரது கவனத்தையும் ஈர்த்தது.
விராலின் பேச்சினை தொடர்ந்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியும் காட்டமாகப் பதில் சொன்னார். அது தவிர, வாராக் கடன் உள்பட்ட பல்வேறு விஷயங்கள்குறித்து அரசாங்கம் தனித்திருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி சில தடாலடி நடவடிக்கைகளை எடுக்கும் போக ஆர்.பி.ஐ.கவர்னர் பதவியை உர்ஜித் பட்டேல் ராஜினாமா செய்யப் போவதாகச் செய்தி பரவியது. இதனைத் தொடர்ந்து மீடியாக்களுக்கும் பேட்டியளித்த மத்திய நிதி அமைச்சர் ஆர்.பி.ஐ-யின் தனித்துவம் காக்கப்படும் என்று சொன்னதை தொடர்ந்து. இந்தப் பரபரப்பு கொஞ்சம் தணிந்தது.
பி.ஜே.பியின் லேட்டஸ்ட் மோதல் ரிசர்வ் வங்கியிடம் தொடங்கியிருக்கிறது. ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகளின் மத்திய அரசின் தலையீடு இருப்பதால். ரிசர்வ் வங்கியின் தனித்தன்மைக்கு சிக்கல் எழுந்துள்ளதாக அதன் துணை கவர்னர் விரால் ஆச்சார்யா பேசிய பேச்சை அவ்வளவு எளிதாகப் புறந்தள்ள முடியாது.
முன்னதாக வேளாண் கடன் வேலைவாய்ப்பு உருவாக்கம், சிறு, குறு நிறுவனங்களுக்குக் கடன் அளித்தல் போன்றவற்றில் ரிசர்ச் வங்கி அதிக கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. முந்தைய மாதம் நடைபெற்ற கூட்டத்தில் ஆர்.பி.ஐ பல தளர்வுகளை அறிவித்துள்ளது. இதனால் வரும் தேர்தலின்போது மத்திய அரசிடமிருந்து கடன் தொடர்பான பல அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதிய வங்கிகளிடமிருந்து வாங்கிய கடன் ரூபாய் 500 கோடிக்கு மேல் கடன் பெற்று அதைத் திரும்பத் செலுத்தாமல் இருக்கும் கடன்கள், வாராக் கடன்களாக மாறும் இந்தக் கடன்கள் வாராக் கடன்களாக அறிவிக்கப்பட்ட தேதியிலிருந்து 180 நாட்களுக்குள் முடிவு காணப்பட வேண்டும். என ஒரு புதிய விதிமுறையை ரிசர்ச் வங்கி கொண்டு வந்தது.
இந்த நடவடிக்கையினால் மின் உற்பத்தி நிறுவனங்கள் பெரிதும் பாதிப்படைந்து ஆர்.பி.ஐ-யின் இந்த உத்தரவினை மாற்ற வேண்டுமென மத்திய அரசுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தன.
வங்கி சாரா நிதி நிறுவனங்களின் கடன் பத்திரிக்கைகளின் தொடர்ந்து முதலீடு செய்ய மியூச்சுவல் ஃபண்டுகள் தயங்கிய நிலையில், நிதித்துறைக்கு ஸ்டேட் வங்கி உள்ளிட்ட சில அரசு வங்கிகள் மட்டுமே கடன் வழங்க முன்வந்தன. ஆனால், பி.சி.ஏ(prompt corrective action) என்று அழைக்கப்படும். யாருக்கும் கடன் வழங்க முடியாத நிலையில் தேனா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட 11 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் உள்ளதால் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் புதிதாகக் கடன் பெற முடியாமல் திண்டாடின. மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி நேற்று தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியது ரிசர்வ் வங்கி எடுக்கும் முடிவுகள் மத்திய அரசின் கொள்கைக்கும் உதவி செய்யும் விதமாக அமைந்திட வேண்டும். ரிசர்வ் வங்கி தன்னிடம் வைத்துள்ள நிதியில் ஒரு பகுதியை மத்திய அரசுக்கு ஒதுக்கி நாட்டின் வறுமையை ஒழிப்பதற்கு உதவிட வேண்டும். எனவே தன்னிடம் எவ்வளவு நிதி இருப்பை கைவசம் வைத்துக் கொள்ளலாம் என்பதை ரிசர்வ் வங்கி நிர்ணயிக்க வேண்டிய தருணம் இதுவாகும்.
2018 முதல் 2019-ம் நிதியாண்டிற்கான நிதிப்பற்றாக்குறை இலக்கின் ஏற்கனவே 95% அடைந்துவிட்ட நிலையில் தேர்தலை எதிர் நோக்கியுள்ள மத்திய அரசுக்கு இன்னும் ஏராளமான நிதி தேவைப்படுகிறது. ரிசர்வ் வங்கியிடம் உள்ள அவசரத்தேவை நிதியிலிருந்து. ஒரு பெரும் பகுதியைச் சிறப்பு டிவிடெண்ட்டாக ஆக வழங்க வேண்டும் என்னும் மத்திய அரசு கோரி வருகிறது.