தற்பொழுது 5 மாநிலங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தொடர்பான பிரசாரக் கூட்டங்கள் கலைக்கட்டியுள்ளன. இந்நிலையில் உத்தரப்பிரதேச முதல்வரும் தனது பிரச்சாரத்தை சத்தீஸ்கரில் தொடங்கியுள்ளார். உத்தரபிரதேச முதல்வரான யோகி ஆதித்யநாத் அவர்கள் இன்று தனது பிரச்சார உரையில் காங்கிரஸ் கட்சிக்கு அயோத்தியில் ராமர் கோவில் கட்ட விருப்பமில்லை எனவும், அவர்களது ஆர்வம் ராமருக்கா , இல்லை பாபருக்கா என விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் சத்தீஸ்கர், ஜார்கண்டில் மாவோயிஸ்ட்களுக்கு உதவியாக இருப்பதாகவும் அவர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.